சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, பக்குவம் இன்றி பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்; அவர் ஒரு பச்சிளம் குழந்தை போல செயல்படுகிறார். அவரின் பேச்சு, பக்குவப்பட்ட அரசியல்வாதி போல இல்லை.'டவுட்' தனபாலு: 43 வயது பிரபல நடிகரை பார்த்து, பச்சிளம் குழந்தை போல செயல்படுகிறார் என்கிறீர்களே. அப்படியானால், தி.மு.க.,வின் அடுத்த நம்பிக்கை
 'டவுட்' தனபாலு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, பக்குவம் இன்றி பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்; அவர் ஒரு பச்சிளம் குழந்தை போல செயல்படுகிறார். அவரின் பேச்சு, பக்குவப்பட்ட அரசியல்வாதி போல இல்லை.

'டவுட்' தனபாலு: 43 வயது பிரபல நடிகரை பார்த்து, பச்சிளம் குழந்தை போல செயல்படுகிறார் என்கிறீர்களே. அப்படியானால், தி.மு.க.,வின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமான, 18 வயதாகும் அவர் மகன் இன்பநிதியை, கருவில் இருக்கும் சிசு என்பீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. பிரசார கூட்டங்களில், மதுரை, 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் நிலையை, செங்கலுடன் ஒப்பிட்டதால், இத்தனை கோபமா?

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்: ஓட்டுக்கு பணம் கொடுக்க வருவோர், 'கிரிமினல்'கள். அவர்கள் முகத்தை தெளிவாக படம் பிடித்து, எனக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறு 'போட்டோ' அனுப்புவோர் வீட்டுக்கு, நான் காபி குடிக்க வருவேன்.

'டவுட்' தனபாலு: பணம் கொடுக்க வருவோர், அழகாக, 'மேக்கப்' போட்டு, பட்டப்பகலில் வர மாட்டார்கள். பணம், பல விதங்களில் வாக்காளர்களுக்கு போய் சேர்வதாக கூறப்படுகிறது. நீங்கள் கேட்பது போல, அவர்களின் படங்களை அனுப்பி வைத்தால், 'ஸ்டோரேஜ்' இடமில்லாமல், உங்கள் மொபைல் போன், 'பணால்' ஆகிவிடும். முழு அளவில் இந்த முறை தான், தேர்தலை சந்திப்பதால், தேர்ந்த அரசியல் கட்சிகளின், 'கைங்கர்யங்களை' நீங்கள் அறியவில்லையோ என்ற, 'டவுட்' வருகிறது!

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: நான், 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எத்தனையோ ஏச்சுகளையும், பேச்சுகளையும் தாங்கி, என் மனம் கடினப்பட்டுள்ளது. பொதுவாழ்வு என வந்துவிட்டால், இதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்பது, நான் அடைந்திருக்கும் மனப் பக்குவம். எனவே, என் தாயை, தி.மு.க., - எம்.பி., ராசா இழித்தது பற்றி மேலும் பேச விரும்பவில்லை.

'டவுட்' தனபாலு: தி.மு.க., ராசா பேசியது போல, அ.தி.மு.க., முக்கிய தலைவர்கள் பேசியிருந்தால், அதையே, தேர்தல் பிரசார யுக்தியாக பயன்படுத்தி, தி.மு.க., ஓட்டுகளை அள்ளியிருக்கும். உங்களிடம் இவ்வளவு பெருந்தன்மை இருக்கிறதே. முதல்வர் பதவி தான், இதுபோன்ற நற்குணங்களை உங்களுக்கு பெற்றுத் தந்துள்ளதோ என்பதே,தமிழக மக்களின், 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஏப்-202106:27:30 IST Report Abuse
D.Ambujavalli இந்த 'தாய் 'விஷயத்தை எங்கே மக்கள் மறந்து விடுவார்களோ என்று கூட்டத்துக்கு கூட்டம் கூறி, கண்ணீர் விட்டு, உலகரியச் செய்து அனுதாப ஓட்டுக்களை அள்ளும் மலிவு உத்தி தான் மனமுதிர்ச்சியோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X