சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகி வீட்டில் வருமானவரித்துறை சோதனை

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
போடி: சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வழங்க பணம், பொருட்கள் பதுக்கியதாக எழுந்த புகாரில் தேனி மாவட்டம் போடியில் அ.தி.மு.க., நிர்வாகி குறிஞ்சி மணி 40, வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.போடி சுப்புராஜ் நகரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வசிப்பவர் குறிஞ்சிமணி. இவர் ஜெ., பேரவை மாவட்ட பொருளாராக உள்ளார். ரத்த பரிசோதனை மையம் நடத்தி

போடி: சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வழங்க பணம், பொருட்கள் பதுக்கியதாக எழுந்த புகாரில் தேனி மாவட்டம் போடியில் அ.தி.மு.க., நிர்வாகி குறிஞ்சி மணி 40, வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

.போடி சுப்புராஜ் நகரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வசிப்பவர் குறிஞ்சிமணி. இவர் ஜெ., பேரவை மாவட்ட பொருளாராக உள்ளார். ரத்த பரிசோதனை மையம் நடத்தி வருகிறார். போடியில் போட்டியிடும் துணை முதல்வருக்கு ஆதரவாக பணியாற்றி வருகிறார். தேர்தலுக்காக இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பணம், பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு புகார்கள் சென்றன.

மதுரை வருமான வரித்துறை உதவி கமிஷனர் பூவலிங்கம் தலைமையில் குறிஞ்சிமணி வீட்டில் நேற்று காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X