சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., மகளிரணி செயலாளர் வீட்டில் ரூ.6.58 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் அ.தி.மு.க., மகளிரணி செயலாளர் வீட்டில் இருந்து ரூ.6.58 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பாக அ.தி.மு.க., வேட்பாளர் மான்ராஜ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவாகின.வாக்காளர்களுக்கு வினியோகிக்க ஸ்ரீவில்லிபுத்துார் ரைட்டன்பட்டி தெரு அ.தி.மு.க., மகளிரணி செயலாளர்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் அ.தி.மு.க., மகளிரணி செயலாளர் வீட்டில் இருந்து ரூ.6.58 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பாக அ.தி.மு.க., வேட்பாளர் மான்ராஜ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவாகின.வாக்காளர்களுக்கு வினியோகிக்க ஸ்ரீவில்லிபுத்துார் ரைட்டன்பட்டி தெரு அ.தி.மு.க., மகளிரணி செயலாளர் கவிதா வீட்டில் பணம் பதுக்கியதாக புகார் எழுந்தது. கூடுதல் பறக்கும்படை அலுவலர் முத்துமாரி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு சோதனை செய்தனர்.

வீட்டு அ.தி.மு.க., நோட்டீஸ்கள், வாக்காளர்கள் பட்டியலுடன் இருந்த ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.வீட்டு மாடியில் சோதனையிட முயன்றனர். நீண்டநேரம் கதவு திறக்கப்படவில்லை. அதிகாரிகளின் கடும் எச்சரிக்கைக்கு பிறகு கதவு திறக்கப்பட்டது. உள்ளே 3 பேர் இருந்தனர். கவர்களில் இருந்த ரூ.3.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 6.58 லட்சம் சிக்கியது.இதுதொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் கவிதா, தந்தை பரமசிவம், அ.தி.மு.க., நிர்வாகிகள் புதுமை டிலியாஸ், அந்தோணி ஜெயசிங், செல்வகுமார், வேட்பாளர் மான்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.* இதேபோல் தம்பிட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க., கிளை செயலாளர் செல்வம், வேட்பாளர் மான்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே பிரச்னையில் ஏற்கனவே மான்ராஜ் மீது ஒரு வழக்கு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாத்துார் வேட்பாளர் மீது வழக்குஇதேபோல் சாத்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஓட்டளிக்க கூறி மேலக்காந்திநகர் எஸ்.வி.என். தோட்டம் அருகே அதே பகுதி முத்துராமலிங்கம் மனைவி வெயிலா 50, பணம் வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா தலைமையிலான பறக்கும் படையினர் அவரிடம் சோதனை நடத்தினர். வாக்காளர்கள் பெயர் அடங்கிய துண்டுசீட்டு, ரூ.42 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வெயிலா, வேட்பாளர் ரவிச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X