தி.மு.க., தேர்தல் அறிக்கை புத்தகம் வினியோகம் திடீரென நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., தேர்தல் அறிக்கை புத்தகம் வினியோகம் திடீரென நிறுத்தம்

Added : ஏப் 05, 2021
Share
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, கலப்பு திருமண நிதியுதவி திட்டத்துக்கு, எதிர்ப்பு கிளம்பியதால், தேர்தல் அறிக்கை புத்தகம் வினியோகம் நிறுத்தப்பட்டது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. பின், அந்த புத்தகங்கள், மாவட்டந்தோறும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, தி.மு.க., கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, கலப்பு திருமண நிதியுதவி திட்டத்துக்கு, எதிர்ப்பு கிளம்பியதால், தேர்தல் அறிக்கை புத்தகம் வினியோகம் நிறுத்தப்பட்டது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. பின், அந்த புத்தகங்கள், மாவட்டந்தோறும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, தி.மு.க., கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அதில், 'அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் புதுப்பிக்கப்பட்டு, செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'கலப்பு திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு, 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் தாலிக்கு, 8 கிராம் தங்க காசு வழங்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு, பிற சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், சமூக வலைதளங்களில், இந்த வாக்குறுதியை கடுமையாக எதிர்த்து, பிற சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.இதையறிந்த, தி.மு.க., மேலிடம், பிற சமூகத்தினரின் எதிர்ப்புகளை தடுக்கும் வகையில், தேர்தல் அறிக்கை புத்தகத்தை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டாம் என, மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள, மாவட்ட தி.மு.க., அலுவலகங்களில், தேர்தல் அறிக்கை புத்தகம், மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க., வரலாற்றில் முதன் முறையாக, தேர்தல் அறிக்கை புத்தகம், வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்படாமல் உள்ளதாக, மூத்த நிர்வாகிகளே புலம்புகின்றனர்

- நமது நிருபர் -.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X