சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தி.மு.க., ஆதரவாக உளவுத்துறை பெண் அதிகாரி!

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
''சொந்தக் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க, கறி விருந்து குடுத்துட்டு இருக்காரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பிரபல முருகன் கோவில் ஊரைச் சேர்ந்த, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கு மறுபடியும் 'சீட்' தராம, 'மாஜி' எம்.பி.,க்கு குடுத்துட்டாங்க... இதனால கடுப்பான எம்.எல்.ஏ., 'வேட்பாளருக்கு யாரும் வேலை செய்யக்
டீ கடை பெஞ்ச்

''சொந்தக் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க, கறி விருந்து குடுத்துட்டு இருக்காரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''பிரபல முருகன் கோவில் ஊரைச் சேர்ந்த, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கு மறுபடியும் 'சீட்' தராம, 'மாஜி' எம்.பி.,க்கு குடுத்துட்டாங்க...
இதனால கடுப்பான எம்.எல்.ஏ., 'வேட்பாளருக்கு யாரும் வேலை செய்யக் கூடாது'ன்னு, தன் ஆதரவாளர்களுக்கு, '144' போட்டுட்டாரு பா...

''அது மட்டும் இல்லை... வேட்பாளர் காசை காட்டி, தன் ஆட்களை இழுத்துட்டு போயிடக் கூடாதுங்கிறதால, தன் ஆட்களை அடிக்கடி பல சுற்றுலா தலங்களுக்கு அழைச்சிட்டு போய், விருந்து குடுத்திருக்காரு பா...

''இதுவரை மூணு முறை இப்படி விருந்து தந்திருக்கார்... சமீபத்துல கறி விருந்து குடுத்தவர், 'எதிர்க்கட்சியான, தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்க'ன்னு, துாண்டி விட்டிருக்காரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

அப்போது, பெஞ்சுக்கு வந்த குப்பண்ணா, ''நேத்து, நானும், நரசிம்மனும் திருத்தணி போயிருந்தோம்... இந்தாரும் பிரசாதம்...'' என, அண்ணாச்சிக்கு விபூதி வழங்கினார்.

அதை நெற்றியில் பூசியபடியே,''கொலை வழக்குல சிக்குனவங்களை, கூடவே அழைச்சிட்டு போனது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கு வே...'' என்றார்.

''எந்தக் கட்சிக்காரரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சிதம்பரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பன்னீர்செல்வம், கட்சி தலைவரின் குடும்ப உறுப்பினர் பரிந்துரையில சீட் வாங்கினாராம்... இவர், பிரசாரத்துலயும், தேர்தல் பணிகள்லயும், தி.மு.க., நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தரல வே...

''இரட்டை கொலை வழக்குல சம்பந்தப்பட்ட தி.மு.க., நிர்வாகிகள் ரெண்டு பேரை மட்டுமே, தன்னோட பிரசாரத்துக்கும், தேர்தல் பணிக்கும் அழைச்சிட்டு போயிருக்காரு...

''அதுவும் இல்லாம, 'பன்னீர்செல்வமா இருக்கிற நான், மாண்புமிகு பன்னீர்செல்வமா மாற, ஓட்டு போடுங்க'ன்னும் பிரசாரம் செய்திருக்கார்... இதெல்லாம், தலைமை வரை புகாரா போயிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.

உடனே, ''தி.மு.க.,வுக்கு ஆதரவா இருக்கார்னு சொல்றா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''எந்த அதிகாரியை சொல்றீங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''திருச்சியில இருக்கற உளவுத்துறை பெண் அதிகாரி ஒருத்தரது குடும்பத்தினர், தி.மு.க., பின்னணியில இருக்கா... அதிகாரியும், தி.மு.க., அனுதாபி தான்... இந்த தேர்தல்ல, தி.மு.க.,வுக்கு ஆதரவா செயல்பட்டுட்டு இருக்காங்க ஓய்...

''அது மட்டும் இல்லை... தனக்கு கீழ இருக்கற அதிகாரிகள், போலீசாரையும், தி.மு.க.,வுக்கு ஆதரவா செயல்படுங்கன்னும் உத்தரவு போட்டிருக்காங்க... சமீபத்துல, ஒரு எஸ்.ஐ., மணப்பாறை தொகுதியில, தி.மு.க., கூட்டணியில போட்டியிடுற ம.ம.க., வேட்பாளர் அப்துல் சமதுக்கு ஆதரவா, வெளிப்படையாகவே வேலை பார்த்திருக்கார் ஓய்...

''இது பத்தி, அ.தி.மு.க.,வினர் புகார் அளிக்க, அந்த அதிகாரியை அழைச்ச பெண் அதிகாரி, 'அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க... நீங்க பயப்படாதீங்க'ன்னு தைரியம் சொல்லி அனுப்பியிருக்காங்க ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''கோமதி, உங்கப்பா வீட்டுல இருந்தா, நாளைக்கு இங்கன வர சொல்லு...'' என, எதிரில் வந்த சிறுமியிடம் கூறியபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஏப்-202106:32:14 IST Report Abuse
D.Ambujavalli இதையெல்லாம் கட்சித் தலைமைக்கு தெரிவிக்காமல், சும்மா யார் எத்தனை ஆயிரம் ஓட்டுக்கு தருவார்கள், உப்பு சப்பில்லாத செய்திகளைக் கொடுக்கத்தான் உளவுத்துறை இருக்கிறது போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X