3வது முறையாக அ.தி.மு.க., ஆட்சி பன்னீர் செல்வம் நம்பிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

3வது முறையாக அ.தி.மு.க., ஆட்சி பன்னீர் செல்வம் நம்பிக்கை

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (6)
Share
பெரியகுளம்: ''சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். 3வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்'' என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்கூறினார்.முன்னதாக பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில் வரசித்தி விநாயகர் பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் கவுமாரியம்மன் கோயில்களில் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்
 3வது முறையாக அ.தி.மு.க., ஆட்சி பன்னீர் செல்வம் நம்பிக்கை

பெரியகுளம்: ''சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். 3வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்'' என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்கூறினார்.

முன்னதாக பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில் வரசித்தி விநாயகர் பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் கவுமாரியம்மன் கோயில்களில் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.வரதராஜப்பெருமாள் கோயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு அர்ச்சகர் கண்ணன் பரிவட்டம் கட்டினார்.

அவரது பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேலும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பெரியகுளம் வந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியவர் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து விளக்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X