சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோடு வசதி கோரி மக்கள் போராட்டம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
பேரூர்:ரோடு வசதிக் கோரி, பொதுமக்கள்கருப்பு சட்டை அணிந்து,போராட்டத்தில் ஈடுபட்டனர்.சோமையம்பாளையம் ஊராட்சி ஹரிணி மற்றும் காயத்திரி அவென்யூ வீதிகளில், தார் ரோடு வசதியில்லை. அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன், ரோட்டை தோண்டி ஜல்லி கற்கள் போட்டுள்ளனர்; தார் ரோடு அமைக்கவில்லை.அதை கண்டித்து, பொதுமக்கள் கருப்பு சட்டை அணிந்து,
 ரோடு வசதி கோரி  மக்கள் போராட்டம்

பேரூர்:ரோடு வசதிக் கோரி, பொதுமக்கள்கருப்பு சட்டை அணிந்து,போராட்டத்தில் ஈடுபட்டனர்.சோமையம்பாளையம் ஊராட்சி ஹரிணி மற்றும் காயத்திரி அவென்யூ வீதிகளில், தார் ரோடு வசதியில்லை. அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன், ரோட்டை தோண்டி ஜல்லி கற்கள் போட்டுள்ளனர்; தார் ரோடு அமைக்கவில்லை.அதை கண்டித்து, பொதுமக்கள் கருப்பு சட்டை அணிந்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாக சென்று வார்டு உறுப்பினர் வீட்டை முற்றுகையிட்டனர்.வடவள்ளி போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 'தேர்தல் முடிந்ததும் ரோடு அமைக்கப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X