சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமுகை வனப்பகுதியில் ஆண் யானை மர்ம மரணம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:சிறுமுகை வனப்பகுதியில், 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. எதனால் இறந்தது என கால்நடை டாக்டர்களும், வனத்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை காப்புக்காடு வனப்பகுதியில், பவானிசாகர் அணை தண்ணீர் தேங்கி நிற்கும், தேரங்கிணறு வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில்

மேட்டுப்பாளையம்:சிறுமுகை வனப்பகுதியில், 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. எதனால் இறந்தது என கால்நடை டாக்டர்களும், வனத்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை காப்புக்காடு வனப்பகுதியில், பவானிசாகர் அணை தண்ணீர் தேங்கி நிற்கும், தேரங்கிணறு வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்தது.அப்பகுதியில் சில யானைகள் நின்று இருந்ததால், வனத்துறையினர் அப்பகுதிக்கு செல்ல முடியவில்லை. நேற்று காலை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர் ஆகியோர் தேரங்கிணறு பகுதிக்கு சென்றனர்.அப்போது அங்கு, 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். உடனடியாக கால்நடை டாக்டர்கள் தியாகராஜன், சதீஷ்குமார் ஆகியோரை வரவழைத்து, பிரேத பரிசோதனை செய்தனர். யானையின் முக்கிய உறுப்புகளை ஆய்வுக்கு எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X