மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: 'நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நாளன்று நீங்கள் நடந்து கொண்டது, மேற்கு வங்கம் மற்றும் வேறு சில மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.'இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான,

புதுடில்லி: 'நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நாளன்று நீங்கள் நடந்து கொண்டது, மேற்கு வங்கம் மற்றும் வேறு சில மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.'இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரது கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி, அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.இந்தத் தொகுதிக்கு, ஏப்.,1ல் தேர்தல் நடந்தது. ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிக்கு, 'வீல்சேரில்' மம்தா பானர்ஜி சென்றார். அப்போது, பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்., தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், சில மணி நேரம், அந்த ஓட்டுச் சாவடியிலேயே, மம்தா இருந்தார்.ஓட்டுப் பதிவை சீர்குலைக்க முயற்சி நடந்ததாகவும், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்யவில்லை என்றும், மம்தா பானர்ஜி புகார் தெரிவித்தார்


latest tamil news



.இதற்கு பதிலளித்து தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாவது:தேர்தலை முறையாகவும், நேர்மையாகவும் நடத்தி வருகிறோம். ஆனால், துவக்கத்தில் இருந்தே, தேர்தல் கமிஷனுக்கு எதிராக பொய் தகவல்களை, மம்தா பரப்பி வருகிறார்.ஒரு முதல்வர் வேட்பாளர், ஓட்டுப் பதிவின்போது, ஓட்டுச் சாவடிக்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியானது. ஓட்டுப் பதிவு நடக்கும்போது, மக்களை துாண்டும் வகையில், மம்தா பானர்ஜி நடந்துள்ளார்.

இதனால், மேற்கு வங்கம், வேறு சில மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படுகிறது.இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-202122:01:08 IST Report Abuse
Sriram V She is not above constiution. Hope all constitutional heads will remind her
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஏப்-202116:52:42 IST Report Abuse
Endrum Indian (ஸ்ரீலங்கா தமிழ் )சும்மா கதைக்க வேண்டாம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஏப்-202116:44:53 IST Report Abuse
J.V. Iyer எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X