கோவை:கோவை தெற்கு தொகுதியில், 359 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 21 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 20 சதவீதம் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதால், 142 இயந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டுள்ளன.அனைத்து இயந்திரங்களிலும் பேட்டரி, பேலட் ஷீட் பொருத்தி, சீலிட்டு, ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளி வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இங்க் முதல் அரக்கு வரை, ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.வடகோவை, ரங்கநாதபுரம், சித்தாபுதுார், கருப்ப கவுண்டர் வீதி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளிகளில், மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE