அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடைசி நேரத்தில் 'மாஸ்' காட்டிய அ.தி.மு.க.,வினர்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
அன்னூர்:கடைசி நேரத்தில், இரு சக்கரப் பேரணி நடத்தி, அ.தி.மு.க., 'மாஸ்' காட்டியது.அவிநாசி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சபாநாயகர் தனபாலுக்கும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அதியமானுக்கும் இடையே, கடும் போட்டி நிலவி வருகிறது.நேற்று மாலை வடக்கு ஒன்றியத்தில், குப்பனூர் ஊராட்சியில், 200 மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடந்தது.குப்பனூர், அழகேபாளையம், ஆணையூர்,

அன்னூர்:கடைசி நேரத்தில், இரு சக்கரப் பேரணி நடத்தி, அ.தி.மு.க., 'மாஸ்' காட்டியது.அவிநாசி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சபாநாயகர் தனபாலுக்கும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அதியமானுக்கும் இடையே, கடும் போட்டி நிலவி வருகிறது.நேற்று மாலை வடக்கு ஒன்றியத்தில், குப்பனூர் ஊராட்சியில், 200 மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடந்தது.குப்பனூர், அழகேபாளையம், ஆணையூர், பொம்மம்பாளையம், ஆலாங்குட்டை என பல கிராமங்கள் வழியாக, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, அ.தி.மு.க., அரசின் சாதனைகளை கூறியபடி, இருசக்கர வாகன பேரணி நடந்தது.தெற்கு ஒன்றியத்தில், காரேகவுண்டன் பாளையம் ஊராட்சியில், இருசக்கர வாகனங்களில் நேரடியாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து, அ.தி.மு.க., வினர் கடைசி நேரத்தில் மாஸ் காட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X