பொது செய்தி

தமிழ்நாடு

கேலிக்கூத்தானது தேர்தல்; பறக்கும் படை எங்கே? பகிரங்கமாக நடக்கிறது பணப்பட்டுவாடா

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
அன்னூர்:அவிநாசி தொகுதியில் பகிரங்கமாக, இரண்டு முக்கிய கட்சிகள் பணப் பட்டுவாடா செய்கின்றனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.அவிநாசி தனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், சபாநாயகர் தனபால், தி.மு.க., கூட்டணி சார்பில், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், அ.ம.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வின் மீரா, மக்கள் நீதி மய்யம்

அன்னூர்:அவிநாசி தொகுதியில் பகிரங்கமாக, இரண்டு முக்கிய கட்சிகள் பணப் பட்டுவாடா செய்கின்றனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.அவிநாசி தனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், சபாநாயகர் தனபால், தி.மு.க., கூட்டணி சார்பில், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், அ.ம.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வின் மீரா, மக்கள் நீதி மய்யம் சார்பில், வெங்கடேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில், ஷோபா கோபாலகிருஷ்ணன் உள்பட, 12 பேர் களத்தில் உள்ளனர்.அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., இடையே, கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த 2ம் தேதி மாலையிலிருந்து, ஒரு தரப்பினர், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு தலா 500 ரூபாய் வழங்க தொடங்கினர்.நேற்று எதிர்தரப்பினர் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில், 50 சதவீதம் பேருக்கு, தலா 200 ரூபாய் வழங்கத் துவங்கினர். எந்த காலனி, எந்த குடியிருப்புக்குச் சென்றாலும், பகிரங்கமாக இரு தரப்பினரும் பண பட்டுவாடா செய்து வருகின்றனர்.பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு உள்ளிட்ட எந்த குழுவும், பணப் பட்டுவாடாவை தடுக்கவில்லை.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சோபா கோபால கிருஷ்ணன் கூறுகையில், "எந்த ஒளிவுமறைவும் இல்லாமல், இரு கட்சிகள் பணப்பட்டுவாடா செய்கின்றன. தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் என பல அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.வெளியூரை சேர்ந்த இரண்டு நபர்கள், நேற்றுமுன்தினம் எங்கள் வீட்டுக்கு வந்து வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று கேட்டு, மூவர் என்றதும் 1,500 ரூபாய் கொடுத்து, குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் படி தெரிவித்தனர்.நான் அவர்களிடம், 'நான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்' என்று கூறியவுடன் தலை தெறிக்க ஓடி விட்டனர். தேர்தல் அதிகாரிகளின் மவுனம், தேர்தலையே கேலிக் கூத்தாகி விட்டது," என்றார்.ஜனநாயகம் கேலிக் கூத்தாகி விட்டது. பகிரங்கமாக ஒரு தரப்பினர், வாக்காளர்களுக்கு, 500 ரூபாயும், மற்றொரு தரப்பினர், 200 ரூபாயும் வழங்குகின்றனர். தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும்.-டாக்டர் வெங்கடேஸ்வரன்மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் களத்தில் மக்களுக்காக போராடுவோர், தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை. பணத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்குகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சகுந்தலாதலித் விடுதலை கட்சி துணை பொதுச்செயலாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X