பொது செய்தி

தமிழ்நாடு

பிரட், பிஸ்கட், மருந்து மறக்காதீங்க... தேர்தல் அலுவலர்களுக்கு அட்வைஸ்!

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கோவை:தேர்தல் பணி முடிந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஒப்படைத்தவுடன், இரவில் வீடு திரும்புவதை தவிர்க்க வேண்டும் என, சமூகவலைதளங்களில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதில், குறிப்பிட்டுள்ளதாவது: இரவு நேரத்தில், தேர்தல் பணி முடித்து வீட்டுக்கு வாகனத்தில் செல்பவர்கள், சிறிது நேரம் துாங்கி விட்டாலும், ஆபத்தில் முடிந்துவிடும். வேகமாக செல்வது, ரயில்

கோவை:தேர்தல் பணி முடிந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஒப்படைத்தவுடன், இரவில் வீடு திரும்புவதை தவிர்க்க வேண்டும் என, சமூகவலைதளங்களில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதில், குறிப்பிட்டுள்ளதாவது: இரவு நேரத்தில், தேர்தல் பணி முடித்து வீட்டுக்கு வாகனத்தில் செல்பவர்கள், சிறிது நேரம் துாங்கி விட்டாலும், ஆபத்தில் முடிந்துவிடும். வேகமாக செல்வது, ரயில் தண்டவாளங்களை கடப்பது போன்ற, விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம்.
புதிய இடத்திற்கு ஜனநாயக கடமை ஆற்ற செல்வதால், வீண் பேச்சு, அரசியல் விமர்சனங்கள் வேண்டாம். பொன் நகைக்கு பதிலாக, புன்னகை மட்டும் அணிந்திருப்பதே சிறந்தது. தேவையான மருந்து பொருட்கள், பிரட், பிஸ்கட், உலர் பழங்களை மறக்காமல் எடுத்து செல்வது அவசியம்.n பெண்கள், கர்ப்பிணிகள் வந்தால், முன்னுரிமை அளிக்கலாம். 2:1 என்ற விகிதத்தில், வரிசையில் நிற்கும், ஆண், பெண் வாக்காளர்களுக்கு, ஓட்டு போட வழிவகை செய்ய வேண்டும்.
மையத்திற்கு அருகேயுள்ள, மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் போன்ற இடங்களின் தொடர்பு எண்களை, தெரிந்து வைத்திருப்பது அவசியம். உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அவசர எண்கள், இக்கட்டான சூழலுக்கு கைக்கொடுக்கும்.n பூத் ஏஜன்ட்களுக்கு கொடுக்கவுள்ள, 17 சி என்ற வாக்கு மையம் குறித்த தகவல் அடங்கிய படிவத்தை, முன்கூட்டியே நகல் எடுத்து சென்றால், கடைசி நேர படபடப்பை தவிர்க்கலாம். அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சி பொறுப்பேற்கும் தலைவரை தேர்வு செய்யும், ஜனநாயக பணிக்கு செல்வதை, மறக்க வேண்டாம். எனவே, விருப்பு, வெறுப்புகளுக்கு இடமின்றி, நடுநிலை கடைபிடிப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X