நாளை தீர்ப்பு! 137 வேட்பாளர்களுக்கு 30 லட்சம் வாக்காளர்கள்!| Dinamalar

தமிழ்நாடு

நாளை 'தீர்ப்பு!' 137 வேட்பாளர்களுக்கு 30 லட்சம் வாக்காளர்கள்!

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021
Share
கோவை:நாளை கோவை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில், 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள், ஓட்டளிக்க தயாராக உள்ளனர். 10 தொகுதிகளிலும், மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.ஒரு மாதமாக, கோவையில் நீடித்ததேர்தல் அனல், நேற்றுடன் முடிவுக்கு வந்து விட்டது. பத்து தொகுதிகளிலும், 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள் அளிக்கப்போகும் தீர்ப்பை எதிர்பார்த்து, 137 வேட்பாளர்கள்
நாளை 'தீர்ப்பு!' 137 வேட்பாளர்களுக்கு 30 லட்சம் வாக்காளர்கள்!

கோவை:நாளை கோவை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில், 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள், ஓட்டளிக்க தயாராக உள்ளனர். 10 தொகுதிகளிலும், மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.ஒரு மாதமாக, கோவையில் நீடித்ததேர்தல் அனல், நேற்றுடன் முடிவுக்கு வந்து விட்டது. பத்து தொகுதிகளிலும், 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள் அளிக்கப்போகும் தீர்ப்பை எதிர்பார்த்து, 137 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதி செய்வது, 100 மீட்டர், 200 மீட்டர் அடையாளத்தை கோடிட்டு காட்டுவது, பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகள் நேற்று நடந்தன. வாக்காளர் காத்திருக்க வசதியாக, பந்தல்கள் இன்று அமைக்கப்பட உள்ளன.
மின்னணு ஓட்டு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள், வெவ்வேறு வகை உறைகள், படிவங்கள், சீல் வைக்கும் பொருட்களுடன், இன்று அலுவலர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்கின்றனர்.தலைமை அலுவலர் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் அலுவலர்கள், இன்றிரவு, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் தங்கிக்கொள்வர்.நாளை அதிகாலையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவுடன் அவர்களது பணி துவங்கும்.
கொரோனா காலம் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, சானிட்டைசர், கையுறை, முக கவசம் ஆகியவை பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், வலது கையில் அணிய, கையுறை வழங்கப்பட உள்ளது.இவை அனைத்தும், இன்று தொகுதிகளுக்கான பாதுகாப்பு அறைகளில் இருந்து, அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட உள்ளன.தேர்தல் ஏற்பாடுகள், மாவட்ட கலெக்டர் நாகராஜன், மத்திய தேர்தல் பார்வையாளர்கள் மேற்பார்வையில் நடந்து வருகின்றன.
யார், எத்தனை பேர்!
தொகுதிகள் 10மொத்த வாக்காளர்கள் 3082028ஆண்கள் 1519027பெண்கள் 1562573மூன்றாம் பாலினத்தவர் 428மொத்த வேட்பாளர்கள் 137ஓட்டுச்சாவடி மையங்கள் 1085ஓட்டுச்சாவடிகள் 4427பதற்றமுள்ள ஓட்டுச்சாவடி 861மாதிரி ஓட்டுச்சாவடிகள் 10தேர்தல் பணி அலுவலர்கள் 21256நுண் பார்வையாளர்கள் 318

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X