காப்பீடுதாரர்களை கவர வெல்கம் லெட்டர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காப்பீடுதாரர்களை கவர 'வெல்கம் லெட்டர்'

Added : ஏப் 05, 2021
Share
கோவை:புதிய தபால் ஆயுள் காப்பீடுதாரர்களை கவரும் வகையில், 'வெல்கம் லெட்டர்' வழங்க வேண்டும் என, தபால் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என இரண்டு வகையான காப்பீடு திட்டங்களை, தபால்துறை வழங்கி வருகிறது. குறைந்த பிரீமியம், அதிக போனஸ், வருமான வரி விலக்கு போன்ற காரணங்களால், தபால் காப்பீடு திட்டத்திற்கு நல்ல

கோவை:புதிய தபால் ஆயுள் காப்பீடுதாரர்களை கவரும் வகையில், 'வெல்கம் லெட்டர்' வழங்க வேண்டும் என, தபால் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என இரண்டு வகையான காப்பீடு திட்டங்களை, தபால்துறை வழங்கி வருகிறது. குறைந்த பிரீமியம், அதிக போனஸ், வருமான வரி விலக்கு போன்ற காரணங்களால், தபால் காப்பீடு திட்டத்திற்கு நல்ல வரவேற்புள்ளது.இந்நிலையில், புதிய காப்பீட்டாளருடனான வணிக உறவை மதிப்புடன் தொடங்கும் வகையில், புதிதாக 'வெல்கம் லெட்டர்' எனும் வரவேற்பு கடிதத்தை வழங்க வேண்டும் என, தபால் காப்பீட்டு இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X