பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்கு அடுத்த நாள் விடுமுறை; கட்டாயம் வேண்டுமென கோரிக்கை

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கோவை:தேர்தல் முடிந்ததும் அடுத்தநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என, தேர்தல் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்து இயந்திரங்களை ஒப்படைத்த பிறகே, அலுவலர்கள் வீடு திரும்ப முடியும்.முன்பு, பள்ளி கோடை விடுமுறை அல்லது வார இறுதியில், பெரும்பாலும் தேர்தல் நடத்தியதால், அடுத்தநாள் ஓய்வு எடுத்த பிறகு, அலுவலர்கள்

கோவை:தேர்தல் முடிந்ததும் அடுத்தநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என, தேர்தல் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்து இயந்திரங்களை ஒப்படைத்த பிறகே, அலுவலர்கள் வீடு திரும்ப முடியும்.முன்பு, பள்ளி கோடை விடுமுறை அல்லது வார இறுதியில், பெரும்பாலும் தேர்தல் நடத்தியதால், அடுத்தநாள் ஓய்வு எடுத்த பிறகு, அலுவலர்கள் பணிக்கு திரும்புவர்.தற்போது பணிநாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஓட்டுப் பதிவு நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்தநாள் விடுப்பு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறுகையில், ''தேர்தலுக்கு அடுத்தநாள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என, அதிகாரிகள் வாய்வழியாக தான் தெரிவிக்கின்றனர். ''அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், ஆசிரியர்கள் மத்தியில், பணிக்கு திரும்ப வேண்டுமா என்ற குழப்பம் உள்ளது. கிட்டத்தட்ட, 12 மணி நேர தேர்தல் பணிக்கு பிறகு, ஓய்வு தேவைப்படுவதால், வரும் 7ம் தேதி, விடுமுறை அறிவிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X