கோவை:மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின், புதிய ஏ கிளாஸ் லிமோசின் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவன மார்க்கெட் தலைமை செயல் அதிகாரி அஷ்வின் நாராயணன் அறிமுகப்படுத்தினார்.அவர் கூறுகையில், ''இதன் விற்பனை விலை, ரூ.39.90 லட்சம். பெட்ரோல் மாடலில், 1.4 லி., டீசல் மாடலில், 2 லி., இன்ஜினும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டர்போ பெட்ரோல் இன்ஜின், 306 எச்.பி., திறன் கொண்டது.இதில், 10.25 அங்குல திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. வயர்லெஸ் சார்ஜர் வசதி, 7 ஆட்டோமேட்டிக் கியர்களை கொண்டது; டீசல் மாடல், 8 கியர்களை கொண்டதாகும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE