சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வக்கீல் புகாரால் இன்ஸ்., மாற்றம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
குனியமுத்தூர்:தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர், காந்தி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு, பணம் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக புகார் எழுந்தது. இதில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. போலீசார் அங்கு சென்று, தங்கராஜ், 48 என்பவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.தகவலறிந்த தி.மு.க.,வினரும் அங்கு கூடினர். தி.மு.க.,வை சேர்ந்த

குனியமுத்தூர்:தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர், காந்தி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு, பணம் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக புகார் எழுந்தது. இதில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. போலீசார் அங்கு சென்று, தங்கராஜ், 48 என்பவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.தகவலறிந்த தி.மு.க.,வினரும் அங்கு கூடினர். தி.மு.க.,வை சேர்ந்த வக்கீல் ஒருவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியாரிடம் விபரம் கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அங்கு திரண்ட அ.தி.மு.க.வினர், தங்கராஜை வெளியே விட கோரினர். பரபரப்பு ஏற்பட்டது.தி.மு.க,- அ.தி.மு.க. இரு தரப்பினரும் சாலை மறியலுக்கு முயன்றனர். இச்சூழலில் தி.மு.க. வக்கீல்கள், போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், விபரங்களை கேட்டறிந்தார். இன்ஸ்பெக்டர் பெரியாரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்தார்.தங்கராஜ் மீது தேர்தல் அலுவலர் புகாரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரொக்கம், 13 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இச்சம்பவத்தால் நள்ளிரவு, 2:00 மணி வரை அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X