ஓட்டுப்போட கோரி ஐ.ஜி.,விழிப்புணர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்போட கோரி ஐ.ஜி.,விழிப்புணர்வு

Added : ஏப் 05, 2021
Share
கோவை:சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போட வலியுறுத்தி, மேற்கு மண்டல ஐ.ஜி., அமல்ராஜ் விழிப்புணர்வு கவிதை வெளியிட்டார்.தமிழகத்தில் நாளை நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி., அமல்ராஜ், நேற்று ஓட்டுப்பதிவு செய்ய வலியுறுத்தி, வெளியிட்டுள்ள

கோவை:சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போட வலியுறுத்தி, மேற்கு மண்டல ஐ.ஜி., அமல்ராஜ் விழிப்புணர்வு கவிதை வெளியிட்டார்.தமிழகத்தில் நாளை நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி., அமல்ராஜ், நேற்று ஓட்டுப்பதிவு செய்ய வலியுறுத்தி, வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தியாகிகள் பெற்றுத்தந்த சமத்துவப் பெருமை ஓட்டு. இந்தியர்களின் உரிமை ஓட்டு. நினைத்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற உதவுவது ஓட்டு. ஒழுங்காய் செய்ய வேண்டிய கடமை ஓட்டு. கண்டிப்பாக ஓட்டிட வேண்டும்', என தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X