மேளதாளம், பட்டாசு, பிங்க் டோக்கன்! அதகளமாய் முடிந்தது இறுதிச் சுற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேளதாளம், பட்டாசு, பிங்க் டோக்கன்! அதகளமாய் முடிந்தது இறுதிச் சுற்று

Added : ஏப் 05, 2021
Share
கோவை:கோடை வெயிலுக்கு சற்றும் குறையாமல் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 7:00 மணியுடன் ஓய்ந்தது. கடைசி கட்ட பிரசாரத்தில், அனைத்துக் கட்சியினரும் தீயாய் வேலை செய்தனர். வேட்பாளர்கள் பிரதான பகுதியில் சுற்ற, நிர்வாகிகள், தங்கள் பங்குக்கு, குழுவாகக் கிளம்பி ஓட்டு சேகரித்தனர்.கிணத்துக்கடவு, சிங்காநல்லுார், கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்துார் தொகுதிகளுக்குட்பட்ட
 மேளதாளம், பட்டாசு, பிங்க் டோக்கன்! அதகளமாய் முடிந்தது இறுதிச் சுற்று

கோவை:கோடை வெயிலுக்கு சற்றும் குறையாமல் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 7:00 மணியுடன் ஓய்ந்தது. கடைசி கட்ட பிரசாரத்தில், அனைத்துக் கட்சியினரும் தீயாய் வேலை செய்தனர். வேட்பாளர்கள் பிரதான பகுதியில் சுற்ற, நிர்வாகிகள், தங்கள் பங்குக்கு, குழுவாகக் கிளம்பி ஓட்டு சேகரித்தனர்.கிணத்துக்கடவு, சிங்காநல்லுார், கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்துார் தொகுதிகளுக்குட்பட்ட சில பகுதிகளுக்கு, விசிட் அடித்தோம். அப்பகுதிகளில், கட்சியினரின் இறுதிக்கட்ட பிரசார துளிகள்:n போத்தனுாரில், மாலை 5:00 மணியளவில், கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன் நடந்து சென்று ஓட்டு சேகரித்தார். மேளதாளங்கள் முழங்க, பெண்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து உடன் சென்றனர்.n வெள்ளலுாரில், தி.மு.க., கூட்டணியை ஆதரித்து இருவேறு குழுவினர், பிரசாரப் பாடல்களுடன் ஓட்டு சேகரித்தனர். இங்கு, அ.தி.மு.க., தரப்பில் ஒரு குழு மட்டுமே பிரசாரத்தில் தென்பட்டது.n சிங்காநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட வசந்தாமில் காலனி பகுதி, தேர்தலுக்கான எவ்வித அறிகுறிகளையும் காட்டாமல், ஊரடங்கு அமைதியுடன் காணப்பட்டது.n நீலிக்கோணம்பாளையத்தில், தி.மு.க., கூட்டணி, கேரள செண்டை மேளங்கள் முழங்க, அப்பகுதியையே அதிர வைத்துக் கொண்டிருந்தது.n ஏர்போர்ட் சுற்றுப் பகுதியில் பிரசார வாகனங்களையோ, கட்சிக் கொடிகளுடன் ஊர்வலத்தையோ காண முடியவில்லை.n மசக்காளிபாளையத்தில், பாலன் நகர் பகுதியில் அ.தி.மு.க., கூட்டணியினர், சிறு மேடை அமைத்து, பிரசாரப் பாடலுடன் ஓட்டு சேகரித்தனர். அரசு நடுநிலைப்பள்ளி அருகே, தி.மு.க., கூட்டணி, பதிலுக்கு பலம் காட்டிக் கொண்டிருந்தது.n சவுரிபாளையம் ஜங்ஷன் பகுதியில், அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்றனர். பெண்கள் சிறு, சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு ஒரு பெண் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு, அவரிடம் பிங்க் நிற டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. கட்சி நிர்வாகிகள், அந்த டோக்கன் எண்ணையும், பெயரையும் சரிபார்த்து, ஒரு நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டனர்.n புலியகுளம் சாலையில், தி.மு.க.,வினர் மேளதாளங்கள் முழங்க ஓட்டு சேகரித்தனர். ஈ.வெ.ரா., சிலை அருகில், காங்., வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பிரசாரத்தை நிறைவு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது; 6 மணிக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.n நியூ சித்தாபுதுார் பகுதியில், அ.தி.மு.க., பெண் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தனர். சுமார் 15 பெண்களுக்கு ஒரு பெண் நிர்வாகி நியமிக்கப்பட்டு, கோஷம் எழுப்பியபடி சென்றனர்.n தடாகம் ரோடு பகுதியில், வானதி சீனிவாசனின் படம் போட்ட பிரசார வாகனங்கள், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.n குனியமுத்துாரில், அ.தி.மு.க., வேட்பாளர் வேலுமணிக்கு, தொண்டர்கள் பட்டாசு வெடித்து, கும்மி அடித்து, பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அவர்,'சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்போம்' என்பதையே, வெவ்வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்பச் சொல்லி ஆதரவு திரட்டினார்.நேரடி பிரசாரம் ஓய்ந்து விட்டது. ஆனால், சமூக வலைதளங்களில் ஓய்ந்தபாடில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X