தேர்தல் விதிமீறல்கள்: சரமாரியாக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் விதிமீறல்கள்: சரமாரியாக அதிகரிப்பு

Added : ஏப் 05, 2021
Share
கோவை:தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 59 புகார்கள் வந்தன.நாளை சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, நேற்று இறுதி கட்ட பிரசாரம் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அராஜக செயல்களிலும் ஈடுபட்டனர்.இத்தகைய விதிமீறல்கள் பற்றி நேற்று ஒரே நாளில், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம், 44

கோவை:தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 59 புகார்கள் வந்தன.நாளை சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, நேற்று இறுதி கட்ட பிரசாரம் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அராஜக செயல்களிலும் ஈடுபட்டனர்.இத்தகைய விதிமீறல்கள் பற்றி நேற்று ஒரே நாளில், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம், 44 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. நேற்று வரை வந்த 288 புகார்களில், 139 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.146 புகார்கள், நிராகரிக்கப்பட்டன. 'சிவிஜில்' செயலி மூலம் நேற்று மட்டும், 15 புகார்கள் வந்திருந்தன. இதுவரை மொத்தம், வந்த 717 புகார்களில், 542க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X