பொது செய்தி

தமிழ்நாடு

கோவை தெற்கு தொகுதியை இந்தியாவே திரும்பி பார்க்கும்! ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசன் உறுதி

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கோவை:''கோவை தெற்கு தொகுதியை இந்தியா திரும்பி பார்க்கும்; அதை செய்வது என் கடமை,'' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நேற்று கோட்டைமேடு, கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில், இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:சி.ஏ.ஏ.,என்ற சட்டத்திற்கு எதிராக,

கோவை:''கோவை தெற்கு தொகுதியை இந்தியா திரும்பி பார்க்கும்; அதை செய்வது என் கடமை,'' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நேற்று கோட்டைமேடு, கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில், இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:சி.ஏ.ஏ.,என்ற சட்டத்திற்கு எதிராக, தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த, முதல் கட்சி மக்கள் நீதி மய்யம். இதுவே எங்களின் அடையாளம்.மக்களுடன் கலந்துரையாடி, பிரச்னை என்பதை பேசி தீர்வு காணும் கட்சியாக இருப்போம். நிறைய பேர் நான் வெளியூரில் இருந்து விடுவேன்; இங்கே வரமாட்டேன் என்கின்றனர்.அப்படியென்றால், முதல்வர் பழனிசாமி எங்கே குடியிருக்கிறார். நான் இங்கே எனக்கொரு வீட்டை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன். என்னுடைய 19 வார்டுகளிலும், அலுவலகங்கள் இருக்கும்.இதை புரியாதவர்கள், ஏதோ குற்றச்சாட்டு சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய எஞ்சிய வாழ்க்கையை, மக்களுக்காக வாழ உள்ளேன்.கோவை தெற்கு தொகுதியை இந்தியா திரும்பி பார்க்கும்; அதை செய்வது என் கடமை. முதல் முறை வாக்காளர்களுக்கு, வரலாற்றை புரட்டி போடும் திறமை உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X