அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஹாரன்' அடித்த கேரள நபருக்கு அ.தி.மு.க., 'செண்டை மேளம்!'

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
போத்தனூர்:கிணத்துக்கடவு தொகுதியில் நேற்று மாலை நிறைவடைந்த பிரசார கூட்டத்தில், கேரளாவை சேர்ந்த நபருக்கு, கட்சியினர் தர்ம அடி கொடுத்தனர்.கடந்த, 15 நாட்களாக நடந்த பிரசாரம் நேற்று இரவு, 7:00 மணிக்கு முடிவடைந்தது.* கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சிவா, சாரதாமில் ரோடு - பொள்ளாச்சி போடு சந்திப்பு அருகே பிரசாரத்தை முடித்தார்.* தி.மு.க.,

போத்தனூர்:கிணத்துக்கடவு தொகுதியில் நேற்று மாலை நிறைவடைந்த பிரசார கூட்டத்தில், கேரளாவை சேர்ந்த நபருக்கு, கட்சியினர் தர்ம அடி கொடுத்தனர்.கடந்த, 15 நாட்களாக நடந்த பிரசாரம் நேற்று இரவு, 7:00 மணிக்கு முடிவடைந்தது.* கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சிவா, சாரதாமில் ரோடு - பொள்ளாச்சி போடு சந்திப்பு அருகே பிரசாரத்தை முடித்தார்.* தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன், சங்கம் வீதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன், சரியாக. 7:00 மணிக்கு சங்கம் வீதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்* அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ரோகிணி (எ) கிருஷ்ணகுமார், முருகா நகர் பஸ் ஸ்டாப் அருகே, பிரசாரத்தை நிறைவு செய்தார்.வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில், கட்சியினர் பட்டாசு வெடித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களில் சென்றவர்கள், முகம் சுளித்து, முணுமுணுத்துச் சென்றனர்,மதுக்கரை மேட்டாங்காடு பகுதியில், அ.தி.மு.க.வினர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே கேரள மாநில பதிவெண் கொண்ட கார் வந்தது. கூட்டத்தினரை விலகச் செய்ய ஹாரன் அடித்தார், காரை ஓட்டி வந்தவர்.உச்சகட்ட பிரசார குஷியில் இருந்த கட்சியினர், இதனால், ஆத்திரமடைந்து, அவரை வெளியே இழுத்துப்போட்டு, தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X