திருப்பூர்:புதிய கட்டடத்தில், இடவசதி இருந்தும்கூட, ஆவ ணங்களை கேட்பாரற்ற போட்டு வைத்துள்ளனர், பி.எப்., அதிகாரிகள்.திருப்பூர் - அவிநாசி ரோடு, காந்தி நகரில் பழைய கட்டடத்தில், மாவட்ட பி.எப்., அலுவலகம் இயங்கிவந்தது. போதிய இடவசதி இல்லாததால், அலுவலகத்தை இடம் மாற்ற முடிவு செய்தனர்.
கடந்த 2020, ஜூன் மாதம், திருப்பூர் - பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள, தனியார் தொழில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்துக்கு, மாவட்ட பி.எப்., அலுவலகம் இடம்பெயர்ந்தது.புதிய கட்டடத்தின் முதல் தளத்தில், கமிஷனர் அறை, ஆய்வாளர்கள்; அமலாக்கம்; ஆவண காப்பக அறைகளுடன் பி.எப்., அலுவலகம் இயங்கி வருகிறது.
திருப்பூரில், பனியன் உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ளன; வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். மாவட்டம் முழுவதும், பி.எப்.,ல் பதிவு செய்த 5 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன; 2.60 லட்சம் தொழிலாளர்கள், உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளனர்.
தொழில் நிறுவனங்கள்; பயனாளி தொழிலாளர் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள்; அமலாக்கம் சார்ந்த முக்கியமான ஆவணங்கள் அனைத்தும், பி.எப்., அலுவலகம் வசம் உள்ளன.புதிய கட்டடத்தில், கூடுதல் இட வசதி இருந்தபோதும், இந்த ஆவணங்களை பராமரிப்பதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
பி.எப்., ஆவணங்களை, இரும்பு ரேக்கில் வைத்து, அருகிலுள்ள கட்டி முடிக்கப்படாத ஒரு தனி அறையில் கண்டுகொள்ளாமல் போட்டுவைத்துள்ளனர்.இதனால், ஆவணங்கள் செல்லரித்துப்போகவும், யாரேனும் எடுத்துச்சென்றால் மாயமாகவும் வாய்ப்பு உள்ளது. ஆவண பாதுகாப்பில் அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படகூடாது. ஆவணங்களை, ஆவண காப்பக அறையில் வைத்து பராமரிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE