பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிக்கு படிவம் அனுப்ப அதிகாரிகள் தயார் நிலை

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஓட்டுச்சாவடிக்கு அனுப்ப வேண்டிய, படிவங்கள், பட்டியல் மற்றும் உறைகள் நேற்று தயார்படுத்தி வைக்கப்பட்டன.ஓட்டுச்சாவடி மையங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன், பல்வேறு வகை படிவங்களும், உறைகளும் பயன்படுத்தப்பட உள்ளன. காலையில் நடக்கும், மாதிரி ஓட்டுப்பதிவு தொடர்பான சான்று;பிரச்னைக்குரிய வாக்காளர் வரும் போது, அவருக்கு வழங்கப்படும், 'சேலஞ்ச் ஓட்டு' (படிவம்
 ஓட்டுச்சாவடிக்கு படிவம் அனுப்ப அதிகாரிகள் தயார் நிலை

திருப்பூர்:ஓட்டுச்சாவடிக்கு அனுப்ப வேண்டிய, படிவங்கள், பட்டியல் மற்றும் உறைகள் நேற்று தயார்படுத்தி வைக்கப்பட்டன.ஓட்டுச்சாவடி மையங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன், பல்வேறு வகை படிவங்களும், உறைகளும் பயன்படுத்தப்பட உள்ளன. காலையில் நடக்கும், மாதிரி ஓட்டுப்பதிவு தொடர்பான சான்று;பிரச்னைக்குரிய வாக்காளர் வரும் போது, அவருக்கு வழங்கப்படும், 'சேலஞ்ச் ஓட்டு' (படிவம் -14 ), 'சேலஞ்ச் ஓட்டு' பதிவுக்காக, இரண்டு ரூபாய் வசூலித்து, அதற்கு வழங்கும் ரசீது;ஓட்டளிக்க வந்த பார்வையற்ற மற்றும் இயலாதவர்கள் விவரம் அடங்கிய, 14ஏ -படிவம்; அவர்களுக்கு உதவியாக வரும் வாக்காளரிடம் பெறும் உறுதிமொழி படிவம்; ஓட்டுப்பதிவு செய்யும் வாக்காளர் விவரங்கள் அடங்கிய பதிவேடு (படிவம் -17ஏ), வாக்குப்பதிவு எண்ணிக்கைகுறித்த படிவம் (17 சி), வாக்காளரின் ஓட்டை மற்றொருவர் பதிவுசெய்துவிட்டால், அவ ருக்கு வழங்கப்படும் 'டெண்டர் ஓட்டு' படிவம் (படிவம் 17 பி).ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் நாட்குறிப்பு மற்றும் உறுதிமொழி; தலைமை தேர்தல் அலுவலரால் போலீசுக்கு அளிக்கப்படும் புகார் படிவம்; வயது குறித்த சர்ச்சை ஏற்பட்டால், வாக்காளர் அளிக்க வேண்டிய உறுதிமொழி படிவம்;வேட்பாளர் ஏஜென்ட் அனுமதி சீட்டு, அனுமதி சீட்டு வழங்கிய கணக்கு படிவம், ஏஜென்ட்களின் மாதிரி கையொப்பம் அடங்கிய படிவம்; உயர் அதிகாரிகள் 'விசிட்' தொடர்பான அறிக்கை படிவம்.ஓட்டுப்பதிவு முடிந்து, மண்டல அலுவலர்களிடம் வழங்கப்படும் பொருட்கள் தொடர்பான படிவம் (21) ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியல் தயார்நிலையில் உள்ளன.இன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன், தேர்தல் தளவாடங்கள் கோணிப்பையில் வைத்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதற்காக, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில், பணியாளர்கள் பட்டியல் தயார் செய்து, தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X