திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதியில் ஓட்டுச் சாவடியில் தயார்படுத்தும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.தொகுதியில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 870 ஆண்; ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 570 பெண் மற்றும் 33 திருநங்கையர் என மொத்தம், 2 லட்சத்து 76 ஆயிரத்து 473 வாக்காளர்கள் உள்ளனர்.திருப்பூர் மாநகராட்சியின் 21 வார்டுகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் மொத்தம் 401 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு பணிகள் மேற்கொள்ளும் வகையில், 33 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அலுவலர்களுக்கு இன்று ஓட்டுச் சாவடி ஒதுக்கீடு செய்து பணியாணை வழங்கப்படவுள்ளது. காலை 8:00 மணி முதல் இந்த உத்தரவு கடிதம், ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் வினியோகிக்கப்படவுள்ளது.ஓட்டுப்பதிவுக்காக, ஓட்டுச் சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி கடந்த இருநாட்களாக மேற்கொள்ளப்பட்டது. தெற்கு தொகுதியில், 201 ஓட்டுச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுச் சாவடியிலிருந்து 100 மீ., தொலைவுக்கு, இருபுறங்களிலும் அடையாளம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியைக் கடந்து சம்பந்தமில்லாத நபர்கள் நடமாடக்கூடாது.தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லு தல், ஓட்டுப்பதிவு முடிந்து திரும்ப எடுத்து, எண்ணிக்கை மையம் கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகளுக்கு வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE