தமிழ்நாடு

'யார் மனசுல யாரு! 'இன்று தெரியும், வாக்காளர் மனநிலை

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:பிரசாரம் ஓய்ந்தாலும், இன்று, கட்சிப்பிரமுகர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் மனநிலையை அறிந்துகொள்ளவும், தங்களுக்கு சாதகமாக ஓட்டுக்களை மாற்றவும் முயற்சிக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், அனல் பறந்த பிரசாரம், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று, எந்த வகையிலான பிரசார நடவடிக்கையிலோ, ஓட்டு கேட்டு வாக்காளர்களை
 'யார் மனசுல யாரு! 'இன்று தெரியும், வாக்காளர் மனநிலை

திருப்பூர்:பிரசாரம் ஓய்ந்தாலும், இன்று, கட்சிப்பிரமுகர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் மனநிலையை அறிந்துகொள்ளவும், தங்களுக்கு சாதகமாக ஓட்டுக்களை மாற்றவும் முயற்சிக்க திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், அனல் பறந்த பிரசாரம், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று, எந்த வகையிலான பிரசார நடவடிக்கையிலோ, ஓட்டு கேட்டு வாக்காளர்களை ஈர்க்கும் வகையிலோ, வேட்பாளர்களோ, கட்சியினரோ ஈடுபடக்கூடாது என்று, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
கட்சிகள் திட்டம்
ஆனால், இன்று முழுக்க, வாக்காளர்களை ஏதாவது ஒரு வகையில், உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மூலம் சந்திக்க, அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சியினர் திட்டமிட்டனர்.வாக்காளரின் பிரச்னையை இறுதி நேரத்தில் செவிமடுத்து கேட்பதன் மூலம், அவர்களது மனதை மாற்றி, தங்கள் வேட்பாளருக்கு ஓட்டளிக்க வைக்க முடியும் என்பது, அவர்களது திட்டம்.
எதிரணி வேட்பாளருக்கு ஓட்டளிப்பார்கள் என்ற எண்ணத்துடன் உள்ள வாக்காளர்கள் அல்லது இவர்கள் தங்களுக்கு ஓட்டளிப்பது சந்தேகமே என கருதப்படும் வாக்காளர்களை சந்தித்து, ஓட்டுக்களை தங்களுக்கு சாதகமாக்க, கட்சி நிர்வாகிகள் இன்று முயல்வர்.இரவில், மும்முரம்நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், பெரும்பாலான வாக்காளர்கள் வீடுகளில்தான் இருந்தனர்; இதை சாதகமாகப் பயன்படுத்தி, பிரசாரம் முடிந்த கையுடன், நலம் விசாரிக்கச் செல்வது போல், வாக்காளர்கள் பலரை, நேற்று இரவே, உள்ளூர் கட்சிப்பிரமுகர்கள் 'கவனித்து' உள்ளனர்.
அவர்களிடம், குடிநீர், சாக்கடை, துப்புரவு உள்ளிட்ட பிரச்னைகளை, வாக்காளர்கள் அடுக்கடுக்காக கூறியுள்ளனர். இப்பிரச்னைகளை களைவோம் என்று, வாக்காளர்களிடம், கட்சியினர் உறுதி கூறியதோடு, 'மறக்காமல், எங்களுக்கு ஓட்டு போடுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்து சென்றனர்.சில வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு ஓட்டுப்போடபோகிறோம் என்பதையும் ஒளிவுமறைவின்றி, கட்சியினரிடம் கூறியுள்ளனர்.
பிரசாரம் நேற்று ஓய்ந்தாலும், இன்றுதான், வாக்காளர்களின் 'அமைதி'யான மனநிலையை தங்கள் ஓட்டுக்கான ஆயுதமாக்குவதற்கான 'முழு பிரசாரத்தை'யும் கட்சியினர் மேற்கொள்ள உள்ளனர். 'வழக்கமாக, பிரசாரம் ஓய்ந்த அடுத்த நாள், எந்த வேட்பாளருக்கு ஓட்டு அளிப்பது என்ற முடிவுடன், வாக்காளர்கள் இருப்பர்.
அன்று வாக்காளரை சந்திப்பதன் மூலம், வாக்காளரின் மனநிலையை அறிந்துகொள்ள முடியும்; பெரும்பாலானோரது மன நிலையை வைத்து, இப்பகுதியில், எந்த வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்பதை, நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்வோம்' என்று சொல்கிறார்கள், கட்சிப்பிரமுகர்கள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
05-ஏப்-202110:18:42 IST Report Abuse
S. Narayanan They want to spread more Corona among the public. This should be stopped immediately.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X