பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரம் இன்று பயணம் :தொகுதி வாரியாக முன்னேற்பாடு 'ஜரூர்'

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3,343 ஓட்டுச்சாவடிகளில், நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. 4,015 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; 16 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுச்சாவடி அலுவலர், 1,100 போலீசார் தேர்தல் பணிக்கு தயாராக உள்ளனர்.எட்டு தொகுதிகளில், 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 417 ஆண்கள்; 11 ஆயிரத்து, 93 ஆயிரத்து, 104 பெண்கள்; 283

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3,343 ஓட்டுச்சாவடிகளில், நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. 4,015 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; 16 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுச்சாவடி அலுவலர், 1,100 போலீசார் தேர்தல் பணிக்கு தயாராக உள்ளனர்.எட்டு தொகுதிகளில், 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 417 ஆண்கள்; 11 ஆயிரத்து, 93 ஆயிரத்து, 104 பெண்கள்; 283 திருநங்கைகள் என, 23 லட்சத்து, 59 ஆயிரத்து, 804 வாக்காளர் ஓட்டளிக்க உள்ளனர்.நாளை காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இன்று, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய ஓட்டுச்சாவடி விவரம் அறிவிக்கப்படும். மதியம், 12:00 மணிக்குள், அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு சென்று சேர வேண்டும்.தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, மண்டல தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க உள்ளனர். மண்டல தேர்தல் அலுவலர்கள், அவற்றை பெற்றுச்சென்று, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க உள்ளனர்.ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்கள், சரக்கு வாகனம் மூலம், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X