பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுவாடா தீவிரம்... பணத்தால் மாறுமா 'மனம்!'

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா தொடர்கிறது. 'நெறைய எதிர்பார்த்தோம்; இவ்ளோ குறைச்சு கொடுத்திட்டீங்களே' என்று வாக்காளர், கட்சியினரிடம் புகார் கூறும் நிலை உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பெரும்பாலான தொகுதிகளில், ஓட்டுக்காக 'பண பட்டுவாடா', கடந்த 2ம் தேதி முதலே துவங்கி விட்டது. அ.தி.மு.க., - தி.மு.க., இருதரப்பிலும், ஓட்டுக்காக பணம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா தொடர்கிறது. 'நெறைய எதிர்பார்த்தோம்; இவ்ளோ குறைச்சு கொடுத்திட்டீங்களே' என்று வாக்காளர், கட்சியினரிடம் புகார் கூறும் நிலை உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பெரும்பாலான தொகுதிகளில், ஓட்டுக்காக 'பண பட்டுவாடா', கடந்த 2ம் தேதி முதலே துவங்கி விட்டது. அ.தி.மு.க., - தி.மு.க., இருதரப்பிலும், ஓட்டுக்காக பணம் கொடுக்கும் தொகுதிகளில், ஒரு ஓட்டுக்கு அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை பணம் வழங்கப்படுகிறது. ஒரு வேட்பாளர் மட்டும் வழங்கும் தொகுதிகளில், ஒரு ஓட்டுக்கு 200ல் துவங்கி, 500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.வாக்காளர் 'பேரம்'வாக்காளர் தரப்பிலோ, எதிரணியினரிடம் இருந்தோ புகார்கள் வந்தால்தான், தேர்தல் அதிகாரிகளால், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால், வாக்காளர் தரப்போ மவுனம் காக்கிறது. எதிரணியினர், தாங்களும் பணம் கொடுப்பதால், புகார் கூற முடியாத நிலை உள்ளது. இது, பண பட்டுவாடாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.வாக்காளர்கள் பலர், 'கடந்த முறையே 500 ரூபா கொடுத்தாங்க... இந்த தடவை அதவிட குறைச்சு கொடுத்தா எப்படி... 2 ஆயிரம் ரூபா வரைக்கும் எதிர்பார்த்தோம்; ஆயிரம் ரூபாய் ஆவது தாங்க' என்று நேரடியாக கட்சியினரிடம் 'பேரம்' பேசும் நிலையும் உள்ளது.யாருக்கு ஓட்டு!இரு வேட்பாளர்களிடமும், பணம் பெறும் வாக்காளர்களும் உள்ளனர். இவர்களில் சிலர், எந்த வேட்பாளர் அதிகமாக பணம் கொடுக்கிறாரோ அதை வைத்துக்கொண்டு, குறைவாக கொடுத்த கட்சியினரிடம் பணத்தை திருப்பியளிப்பதும், உடனே, அவர்கள் எதிரணி வேட்பாளர் கொடுத்ததை விட அதிகமாக கொடுப்பதாக உறுதி கூறுவதும், கண்கூடாக நடக்கிறது.'இரு வேட்பாளர் கொடுத்தா என்ன... அவங்க வீட்டு காசையா கொடுக்கறாங்க... வாங்கீட்டு, நம்ம மனசுக்கு பிடிச்சவங்களுக்கு ஓட்டு போடுவோம்' என்று கூறும், வாக்காளர்களும் இருக்கின்றனர். உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மூலம், மகளிர் குழு அல்லது பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்ற போர்வையில், வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.'உள்ளூர் நிர்வாகிகள், இந்தப் பணத்தை முறையாக வழங்குகின்றனரா என்பதை மற்றொரு நிர்வாகி அல்லது வேறு வழிகள் மூலம், வேட்பாளர் மற்றும் கட்சி மேலிடம் கண்காணிக்கிறது. இதையும் மீறி, பண பட்டுவாடாவில் 'தகிடுதத்தங்கள்' மேற்கொள்ளப்படுகின்றன; இதை இந்த நேரத்தில், தடுப்பது இயலாததாக உள்ளது' என்று கூறுகிறார், பெயர் வெளியிட விரும்பாத, ஒரு கட்சிப்பிரமுகர்.வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம், அவர்களது மனநிலையை மாற்றுமா என்பது, அரசியல் கட்சியினருக்கு புரிபடாத புதிராக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X