அனுப்பர்பாளையம்:குடிநீர் இணைப்புக்கு முறைகேடாக வசூலிக் கப்பட்ட பணத்தை, ஊழியர்கள் திருப்பி கொடுத்தனர்.திருப்பூர் 18வது வார்டு நெருப்பெரிச்சல், திருமலை நகர் பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு கொடுக்க மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் தலா ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்து உள்ளனர்.இத்திட்டத்தின் கீழ், இணைப்பு கொடுக்க பணம் வசூலிக்கக்கூடாது என்ற விதிமுறை மீறி இது வசூலிக்கப்பட்டுள்ளது. மா.கம்யூ.,திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி, அளித்த புகாரையடுத்து, மாநகராட்சி கமிஷனர் எடுத்த நடவடிக்கையால், இணைப்புக்கு பணம் பெற்ற மாநகராட்சி ஊழியர்கள் பணம் பெற்றவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்தனர்.'விடுபட்ட வீடுகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி உடனடியாக இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பணம் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் உறுதி அளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE