திருப்பூர்:தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து, 1800 425 6989 என்ற எண்களில், தகவல் தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த, 15 நாட்களாக நடந்துவந்த பிரசாரம் இன்று இரவு, 7:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. ஓட்டுப்பதிவு, 6ம் தேதி காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 வரை நடக்கிறது.ஓட்டுப்பதிவு நெருங்குவதாலும், பிரசாரம் நிறைவடைந்துள்ளதாலும், பண பட்டுவாடா செய்வது; ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் விதிமீறல்கள் நடக்கும் என, அதிகாரிகள், 'அலர்ட்' ஆகியுள்ளனர்.சட்டசபை தொகுதிகளில் இயங்கும், நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர், முழு அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.இருப்பினும், தேர்தல் விதிமுறை மீறல் நடப்பது தெரியவந்தால், உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு, 1800 425 6989 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE