இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அட்டூழியம் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம்சத்தீஸ்கரில், நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையின்போது, காணாமல் போனதாக கருதப்பட்ட, 17 வீரர்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, இந்த சண்டையில் வீர மரணமடைந்த, பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை, 22 ஆக அதிகரித்துள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான,
today, crime, round up, இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அட்டூழியம் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம்

சத்தீஸ்கரில், நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையின்போது, காணாமல் போனதாக கருதப்பட்ட, 17 வீரர்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, இந்த சண்டையில் வீர மரணமடைந்த, பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை, 22 ஆக அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள, 27 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் நக்சலைட் பிரச்னை உள்ளது.சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநில போலீசின் அதிரடிப் படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் இணைந்து, சத்தீஸ்கரின் பீஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.கடந்த, 2ம் தேதி இரவு, இந்த அதிரடி வேட்டை துவங்கியது. பல்வேறு குழுக்களாக பிரிந்து, வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.


latest tamil news


நேற்று முன்தினம் இரவு, ஐந்து வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஒரு பெண் நக்சலைட்டும் கொல்லப்பட்டார். இந்த சண்டையின்போது, 18 வீரர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.நேற்று காலையும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. அப்போது, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், 17 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, சண்டையில் வீர மரணமடைந்த வீரர்கள் எண்ணிக்கை, 22 ஆக உயர்ந்துள்ளது.

மருமகள் நிர்வாணம் மாமியாருக்கு வலை

ஒடிசாவில், கேட்ட வரதட்சணை கொடுக்காத மருமகளை நிர்வாணமாக்கி, தாக்குதல் நடத்திய மாமியாரை, போலீசார் தேடுகின்றனர்.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள கேந்திரபாரா மாவட்டம் கோரக் கிராமத்தில், கேட்ட வரதட்சணை கொடுக்காத, 24 வயது மருமகளை, மாமியார் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சமீபத்தில், வீட்டிற்குள் மருமகளை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசிப்பவர்கள் மீட்டுள்ளனர். மருமகளை நிர்வாணமாக்கி மாமியார் தாக்கும் கொடூரக் காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவியது. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் குடும்பத்தினர், போலீசில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான மாமியாரை தேடி வருகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்

பணம் பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

போத்தனூர்:போத்தனூரை அடுத்த வெள்ளலூர் நாவலர் வீதியை சேர்ந்தவர் விமல், 31. இவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கு, 12வது வார்டு அ.தி.மு.க., தலைவர் ராமலிங்கம், 65, அன்பு சரண், 54, பாலாஜி, காளிமுத்து, குட்டி மற்றும் ஆனந்த் ஆகியோர், நேற்று முன்தினம் தேர்தலில் ஓட்டுப்போட, 2000 ரூபாய் கொடுப்பதாக, போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசாரிடம், ராமலிங்கம், அன்பு சரண் ஆகியோர் சிக்கினர். போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்டு, விசாரிக்கப்பட்டனர். மேற்குறிப்பிட்ட ஆறு பேர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அ.தி.மு.க., மகளிரணி செயலாளர் வீட்டில் ரூ.6.58 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் அ.தி.மு.க., மகளிரணி செயலாளர் வீட்டில் இருந்து ரூ.6.58 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பாக அ.தி.மு.க., வேட்பாளர் மான்ராஜ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவாகின.வாக்காளர்களுக்கு வினியோகிக்க ஸ்ரீவில்லிபுத்துார் ரைட்டன்பட்டி தெரு அ.தி.மு.க., மகளிரணி செயலாளர் கவிதா வீட்டில் பணம் பதுக்கியதாக புகார் எழுந்தது. கூடுதல் பறக்கும்படை அலுவலர் முத்துமாரி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு சோதனை செய்தனர்.

வீட்டு அ.தி.மு.க., நோட்டீஸ்கள், வாக்காளர்கள் பட்டியலுடன் இருந்த ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.வீட்டு மாடியில் சோதனையிட முயன்றனர். நீண்டநேரம் கதவு திறக்கப்படவில்லை. அதிகாரிகளின் கடும் எச்சரிக்கைக்கு பிறகு கதவு திறக்கப்பட்டது. உள்ளே 3 பேர் இருந்தனர். கவர்களில் இருந்த ரூ.3.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 6.58 லட்சம் சிக்கியது.இதுதொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் கவிதா, தந்தை பரமசிவம், அ.தி.மு.க., நிர்வாகிகள் புதுமை டிலியாஸ், அந்தோணி ஜெயசிங், செல்வகுமார், வேட்பாளர் மான்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.* இதேபோல் தம்பிட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க., கிளை செயலாளர் செல்வம், வேட்பாளர் மான்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே பிரச்னையில் ஏற்கனவே மான்ராஜ் மீது ஒரு வழக்கு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாத்துார் வேட்பாளர் மீது வழக்குஇதேபோல் சாத்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஓட்டளிக்க கூறி மேலக்காந்திநகர் எஸ்.வி.என். தோட்டம் அருகே அதே பகுதி முத்துராமலிங்கம் மனைவி வெயிலா 50, பணம் வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா தலைமையிலான பறக்கும் படையினர் அவரிடம் சோதனை நடத்தினர். வாக்காளர்கள் பெயர் அடங்கிய துண்டுசீட்டு, ரூ.42 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வெயிலா, வேட்பாளர் ரவிச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

3 பள்ளி பஸ்கள் எரிந்து நாசம்

காரைக்கால்,: காரைக்காலில், கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பள்ளி பஸ்கள், திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாயின.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், கல்வித் துறை சார்பில், 1 ரூபாய் கட்டணத்தில், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு முதல் பஸ்கள் இயக்கவில்லை. இதனால், ஓராண்டாக, கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று, கீழகாசாகுடி சிவன் கோவில் அருகில் நிறுத்தியிருந்த மூன்று பஸ்களில் ஒன்றில், திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகில் நிறுத்தி வைத்திருந்த இரு பஸ்களிலும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.ஆயினும், மூன்று பஸ்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. பஸ்களுக்கு தீ வைத்தது யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

கனரா வங்கி பணம் ரூ.60 லட்சம் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகரில் கனரா வங்கி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.மதுரையில் இருந்து திருமங்கலம், விருதுநகர் வழியாக கனரா வங்கி ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் ரூ.1 கோடியே 14 லட்சத்தை எடுத்து கொண்டு பொறுப்பாளர் விஜயரங்கன் தலைமையில் டிரைவர் செல்வகணேஷ் ஓட்டி வந்தார். வழியில் உள்ள ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பினர்.விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பி விட்டு திரும்பினர். அப்போது பறக்கும்படை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் சோதனை நடத்தினார். உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.60 லட்சம் பறிமுதல் செய்து தாசில்தார் சிவஜோதி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

டூவீலரில் சென்ற இருவர் மினி லாரி மோதி பலி

உச்சிப்புளி : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே டூவீலர் மீது மினி லாரி மோதிய விபத்தில் டூவீலரில் சென்ற இருவர் பலியாகினர்.


latest tamil news


நார் தொழிற்சாலையில் தீ 4 டிராக்டர், இயந்திரங்கள் சேதம்

பொள்ளாச்சி:கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், நார் உற்பத்தி தொழிற்சாலை நடத்துகிறார். நேற்று பகல், 2:00 மணிக்கு தொழிற்சாலைக்குள் திடீரென புகை கிளம்பியது. காற்றும் பலமாக வீசியதால், தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தொழிற்சாலைக்குள் இருந்த ஒட்டு மொத்த தென்னை நாரும் எரிந்து சாம்பலானது.தகவல் அறிந்து, கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. தீயணைப்பு வீரர்கள், தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நார் எரிந்து சேதமடைந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு டிராக்டர்கள், இயந்திரங்கள் அனைத்தும் தீயில் கருகின. தொழிற்சாலைக்கு வெளியே உலர வைக்கப்பட்டிருந்த நார் மட்டுமே தப்பியது.தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், டிராக்டர்கள் மற்றும் உற்பத்தியான நார்கள் சேதம் குறித்து,வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


மதுவகைகள் கடத்தல் :சோதனையில் சிக்கியது

வால்பாறை:வால்பாறையில், 'சில்லிங்' விற்பனைக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட மது வகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.வால்பாறையில் சமீப காலமாக, 'சில்லிங்' விற்பனை அமோகமாக நடக்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் ஆதரவுடன் 'சில்லிங்' விற்பனை நடக்கிறது.இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வால்பாறை - நடுமலை ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அப்போது, காரில், 185 மது பாட்டில்கள் 'சில்லிங்' விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மது பாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள், வால்பாறை போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து, மது பாட்டில் கடத்திய பச்சமலை எஸ்டேட்டை சேர்ந்த காட்டுத்துரை,41, ஆனந்தராஜ்,31, ஆகிய இருவரை கைது செய்தார்.

அ.தி.மு.க., - தி.மு.க., மோதல் 4 பேர் மீது வழக்கு பதிவு

திண்டிவனம் : திண்டிவனத்தில் அ.தி.மு.க.,-தி.மு.க., இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்ருட்டியில் ரூ. 74 ஆயிரம் பறக்கும்படை பறிமுதல்

பண்ருட்டி : பண்ருட்டியில் தி.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 74 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.


உலக நிகழ்வுகள்

நிலச்சரிவு: 44 பேர் பலி

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதிகளில், கடந்த சில நாட்களாக, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி, 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட ஒன்பது பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

'பேஸ்புக்' தகவல் திருட்டு

நியூயார்க்: சமூக வலைதளமான, 'பேக்புக்'கை, உலகம் முழுதும், 280 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் பயனாளிகள், 50 கோடிக்கும் அதிகமானோரின் தகவல்கள், 'ஆன்லைன்' வலைதளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 106 நாடுகளைச் சேர்ந்த பயனாளிகளின், தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐ.டி.,க்கள், முழு பெயர், இடம், பிறந்தநாள் தேதிகள், மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட அந்த தகவல்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

சாலை விபதது: 11 பேர் பலி

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில், நேற்று அதிகாலை, விரைவு வழிச் சாலையில், லாரி மீது, பயணியர் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 19 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கப்பல் விபத்து: 17 பேர் மாயம்

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில், கடற்பகுதியில் நேற்று, மீன்பிடி கப்பல் மீது, சரக்குக் கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 32 பேருடன் சென்ற அந்த மீன்பிடி கப்பல், கடலில் கவிழ்ந்தது. பின், தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், கடலில் தத்தளித்த, 15 பேரை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், 17 பேர் மாயமாகி உள்ளதால், அவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

ஆசிய பெண்ணுக்கு அவமதிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில், கடந்த, 30ம் தேதி, புறநகர் ரயிலில் ஆசிய வம்சாவளி பெண் ஒருவர், தன் மூன்று குழந்தைகளுடன் பயணித்தார். அப்போது, இனவெறி பிடித்த, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த பெண்ணை, கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அவர் மீது எச்சில் துப்பியும், அவரது மொபைல் போனை வெளியே எறிந்தும் மோசமான செயல்களில் ஈடுபட்டார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரை, தேடும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அவசர நிலை பிரகடனம்

மியாமி: அமெரிக்காவின் புளோரிடாவில், மாசுபடும் நீரை சேமிப்பதற்காக, பெரிய அளவிலான குளம் ஒன்று உள்ளது. இந்நிலையில், இந்த குளத்தில் இருந்து, நீர் கசியத் துவங்கியுள்ளது. அதிக அளவிலான நீர் வெளியேறுவதால், அருகிலுள்ள சாலைகளில் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனைக் கருத்தில் வைத்து, மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்து, மாகாண கவர்னர் ரான் டிசான்டிஸ், நேற்று உத்தரவு பிறப்பித்தார். அந்த குளம் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

.நிர்வாண வீடியோ: கும்பல் கைது

துபாய்: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நிர்வாணமாக பெண் நிற்கும் 'வீடியோ' ஒன்று, சமூக வலை தளங்களில் பகிரப்பட்டது. இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்ததும், அந்த வீடியோவை பகிர்ந்த கும்பல் மீது, வழக்குப்பதிவு செய்து, கைது செயயப்பட்டனர். இந்த குற்றச் செயலுக்கு, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X