தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கும் இந்தியர்கள்

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
துபாய்,: குவைத் நாட்டில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அந்நாட்டு குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், அங்கு பணியாற்றும் ஆசிய மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.மேற்காசிய நாடான குவைத்தில், ஆசிய மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிலும்

துபாய்,: குவைத் நாட்டில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அந்நாட்டு குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், அங்கு பணியாற்றும் ஆசிய மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.latest tamil newsமேற்காசிய நாடான குவைத்தில், ஆசிய மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளில் துவங்கி, பெட்ரோல் பங்குகள், பல்பொருள் அங்காடிகள், ஓட்டல்கள், வீடுகளில் குழந்தைகள் பராமரிப்பு, துப்புரவுப் பணி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல வெளிநாடுகளில் இருந்து குவைத் வந்து பணியாற்றுவோர் எண்ணிக்கை, அந்நாட்டு மக்கள் தொகையில், 70 சதவீதம் என கூறப்படுகிறது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, இவர்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.குவைத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பதிவு செய்யும் பணிகள் துவங்கின.


latest tamil news


சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள், கடுமையான உடல்நல கோளாறுகள் உள்ளவர்களுக்கு, முதலில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. நாளடைவில், தடுப்பூசி போட்டுக் கொள்ள விண்ணப்பிக்கும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல், குவைத் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து, 2.38 லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் விண்ணப்பித்தால், டாக்டர்கள், செவிலியர்கள், எண்ணெய் நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள் என, 18 ஆயிரம் பேருக்கு மட்டுமே, தடுப்பூசி போடப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், குவைத்தில் கடைநிலைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிய மற்றும் ஆப்ரிக்க பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட, லட்சக்கணக்கானோர் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
05-ஏப்-202117:07:31 IST Report Abuse
srinivasan Ughiuyr Muslims are special, Arab world will not consider them. Arabs are peculiar, they the don't want to live in the free world.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
05-ஏப்-202113:32:48 IST Report Abuse
Ramesh Sargam ஒரு சில ஊர்களில், தடுப்பூசி போதிய அளவு இருந்தும், மக்கள் போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள். அந்த அளவுக்கு ஒரு பயத்தை ஏட்படுத்தியிருக்கிறது ஒரு சில WhatsApp மற்றும் Facebook rumour செய்திகள். அப்படி வதந்தி செய்திகளை பரப்புபவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை அளிக்கவேண்டும்.
Rate this:
Cancel
தீயமுக ஒழிக தமிழ்நாட்டில் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-202111:03:36 IST Report Abuse
தீயமுக ஒழிக தமிழ்நாட்டில் நான் இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் (துபாய்), எல்லா நாடு மக்களும் சரி சமமா தான் பார்க்கிறார்கள் . இங்கு எல்லாருக்கும் தடுப்பூசி போட படுகிறது. பணக்காரன், காசு இல்லாதவன் என்று இங்கு பார்ப்பதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X