பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் கிளம்பிய புது பூதம்

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை,: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரம்பிய கார் சிக்கிய வழக்கின் விசாரணையில், தோண்ட தோண்ட புதுப்புது விவகாரங்கள் வெளிவந்தபடி உள்ளன. போலீஸ் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மாதம் தோறும், 'மாமூல்' வழங்கும் பட்டியல் தற்போது சிக்கியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மும்பையில் உள்ள,

மும்பை,: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரம்பிய கார் சிக்கிய வழக்கின் விசாரணையில், தோண்ட தோண்ட புதுப்புது விவகாரங்கள் வெளிவந்தபடி உள்ளன.

போலீஸ் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மாதம் தோறும், 'மாமூல்' வழங்கும் பட்டியல் தற்போது சிக்கியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மும்பையில் உள்ள, தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரம்பிய கார் ஒன்று நிறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த காரின் உரிமையாளரான, மற்றொரு தொழிலாதிபர் மன்சுக் ஹிரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த வழக்குகளில், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸேயை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. மேலும், அவரது கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.வழக்கின் போக்கை மாற்றியதாக, முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார்.மாதம் தோறும், 100 கோடி ரூபாய் வசூலித்து தரும்படி உத்தரவிட்டதாக, உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் மீது, பரம்வீர் சிங் புகார் கூறினார்.இந்நிலையில், சச்சின் வாஸே அடிக்கடி செல்லும் ஒரு கிளப்பில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, சில போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் பெயர்களும், அவர்களது பெயருக்கு எதிரில், குறிப்பிட்ட தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு பல மாதங்களுக்கான பட்டியல் கிடைத்துள்ளது.

மாதம்தோறும், இந்த அதிகாரிகளுக்கு, மாமூல் பணம் சென்றுள்ளதை குறிப்பதாக இந்த ஆவணங்கள் இருப்பதாக, என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பயங்கரவாதம் தொடர்பாக மட்டுமே விசாரிக்க முடியும் என்பதால், இந்த மாமூல் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறையின் விசாரணைக்கு பரிந்துரைக்க, என்.ஐ.ஏ., திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-202122:40:03 IST Report Abuse
Sriram V This is typical alliance of congies, it is called Maamul vikas agadi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X