பொது செய்தி

தமிழ்நாடு

'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை': முன்னேற்றமில்லாத பழங்குடியினர் வாழ்க்கை

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
பந்தலுார்:கூடலுார் தொகுதியில் ஓட்டு வங்கிகளாக உள்ள மண்ணின் மைந்தர்களின் வாழ்வில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.கூலுார் தனி தொகுதியில் மண்ணின் மைந்தர்களான குரும்பர், பனியர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள் சொற்ப அளவில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் மத்திய, -மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.
 'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை': முன்னேற்றமில்லாத பழங்குடியினர் வாழ்க்கை

பந்தலுார்:கூடலுார் தொகுதியில் ஓட்டு வங்கிகளாக உள்ள மண்ணின் மைந்தர்களின் வாழ்வில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.கூலுார் தனி தொகுதியில் மண்ணின் மைந்தர்களான குரும்பர், பனியர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள் சொற்ப அளவில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் மத்திய, -மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. திட்டங்களை நிறைவேற்ற பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகின்றன.இது தவிர கடந்த சில ஆண்டுகளாக நக்சல் நிதி எனும் பெயரிலும் நிதி பெறப்படுகிறது.இதனை செயல்படுத்தும் வகையில், மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு முகாம்களும் பழங்குடியின கிராமங்களில் நடத்தப்படுகிறது. பழங்குடியினர்களின் தேவைகள் குறித்து மனுவும் பெறப்படுகிறது.ஆனால் மனுக்கள் அனைத்தும் கிடப்பில் போடப்படுகிறது. எந்த பணிகளும்; எந்த அடிப்படை வசதிகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.இதற்கு உதாரணமாக, மாநில எல்லையான நம்பியார்குன்னு அருகே உள்ள, புதுச்சேரி பழங்குடியின கிராமத்தில் உள்ள, 10- வீடுகளும் எப்போது விழுமோ என்ற நிலையில் இருப்பதுடன், நடைபாதை உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் இல்லாமல் உள்ளது. இங்கு நடப்பாண்டு, ஐந்துக்கும் மேல் சிறப்பு முகாம்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லைஇங்குள்ள மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில், இதேபோல் பல பழங்குடியின கிராமங்களும் எவ்வித அடப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன. தேர்தல் நேரத்தில் மட்டும் எங்களை தேடி வரும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்றால் எங்களை மறந்து விடுகின்றனர். ஆட்சிகள் மாறினாலும், எங்கள் வாழ்வில் காட்சிகள் மாறவில்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X