குன்னுார்:நீலகிரி மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபை தேர்தல், 6ம் தேதி (நாளை) நடப்பதை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிறுவனங்கள் குறித்து பெறப்படும் புகார்கள் மீது, சென்னை தொழிலாளர் ஆணையம் ஆணையர் அறிவுரையின்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக, தேர்தல் கட்டுப்பாட்டு அறை குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிறுவனங்கள் அடையாளம் கண்டு அறிவுரை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி, ஊட்டி உதவி ஆய்வாளர் வசந்தம் ஆகியோர் தலைமையில், இரு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு சதீஷ்குமார் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE