பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வார்டு நிரம்பி வழிகிறது: கோவையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில், கடந்த ஜனவரியில் கொரோனா பாதிப்பு குறைந்ததால், இனி கட்டுப்படுத்தப்பட்டு விடும் என, அனைவரும் நிம்மதியடைந்தனர். ஆனால், தற்போது கொரோனா தொற்று மீண்டும் மெல்ல உச்சத்தை நெருங்கி வருகிறது.தமிழகத்தில் சென்னைக்கு

கோவை:கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில், கடந்த ஜனவரியில் கொரோனா பாதிப்பு குறைந்ததால், இனி கட்டுப்படுத்தப்பட்டு விடும் என, அனைவரும் நிம்மதியடைந்தனர். ஆனால், தற்போது கொரோனா தொற்று மீண்டும் மெல்ல உச்சத்தை நெருங்கி வருகிறது.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.பாதிப்பு நாள் ஒன்றுக்கு, 300 என்ற நிலையை எட்டி வருகிறது. தினமும், 10 சதவீதம் அளவுக்கு பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் முதல் வாரத்தில், 1.5 சதவீதமாக இருந்த பாதிப்பு, மாத இறுதியில், 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்காக, 555 படுக்கைகள் உள்ளன. பாதிப்பு அதிகரிப்பால், படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.கொரோனா தொற்றுக்கான பிரத்யேக சிகிச்சை மையமான, இ.எஸ்.ஐ., மருத்துவமனையிலும், நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள, 650 படுக்கைகளில், 505 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை அதிகரிக்கவும் சுகாதார துறையினர் திட்டமிட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில், 52 தடை செய்யப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவீந்திரன் கூறுகையில்,''மருத்துவமனையில், 650 படுக்கைகள் உள்ளன. நேற்றைய நிலவரப்படி(நேற்று முன்தினம்) 505 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம். கூடுதலாக, 150 படுக்கைகள் ஏற்படுத்தப்படும்,'' என்றார்.கூடுதல் படுக்கை வசதிகோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''பாதிப்பு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால், 1,000 படுக்கைகள் வரை ஏற்படுத்தப்படும். பிற நோயாளிகளுக்கு அவசர நிலையின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் பற்றாக்குறை சிறிது உள்ளது. அதை சமாளிக்க தேவைக்கேற்ப பிற துறை டாக்டர்களை பணியமர்த்துகிறோம். மருந்துகள் தேவைக்கேற்ப உள்ளன. பொதுமக்கள், சமூக இடைவெளி, மாஸ்க் அணிதலை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X