தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் சிக்கினர்: ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் சிக்கினர்: ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி

Added : ஏப் 05, 2021
Share
கோவை:கோவை வடக்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பிரமுகர்களை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பூசாரிபாளையம் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கோவை வடக்கு சட்டசபை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பறக்கும் படையினர், அ.தி.மு.க., நிர்வாகி செல்வி மற்றும்

கோவை:கோவை வடக்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பிரமுகர்களை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பூசாரிபாளையம் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கோவை வடக்கு சட்டசபை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பறக்கும் படையினர், அ.தி.மு.க., நிர்வாகி செல்வி மற்றும் மருதவாணனிடம் சோதனை நடத்தினர்.சோதனையில் அவர்களிடம், 18 ஆயிரம் ரூபாய் மற்றும் வாக்காளர் பட்டியல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை பறக்கும் படையினர் செல்வபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பி.என்.புதுார் பகுதியில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பறக்கும் படையினர் அங்கிருந்த, 5.15 லட்சம் ரூபாயை கைப்பற்றி விசாரித்தனர்.விசாரணையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இது தொடர்பாக, பி.என்.புதுார் தி.மு.க., பகுதி கழகச் செயலாளர் பாக்யராஜிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X