கோவை:''தி.மு.க., தலைமையிலான அணி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்,'' என, காங்., மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், தனது இறுதி கட்ட பிரசாரத்தை சிவானந்த காலனியில் துவங்கி, புலியகுளத்தில் நிறைவு செய்தார்.முன்னதாக, காங்., மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில்,''சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இதில் தி.மு.க., தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும்,'' என்றார்.கோவை எம்.பி., நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE