கோவில் அடிமை நிறுத்து! தேசிய அளவில் டிரெண்டிங்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கோவில் அடிமை நிறுத்து!' தேசிய அளவில் 'டிரெண்டிங்'

Added : ஏப் 05, 2021
Share
பேரூர்:'கோவில் அடிமை நிறுத்து' இயக்கத்துக்கு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவிக்கின்றனர். அது, டுவிட்டரில், 'டிரெண்டிங்' ஆகி, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.இதுகுறித்து, சத்குரு கூறியுள்ளதாவது:தமிழ் மக்கள் அனைவரும் கோவில்களை விடுதலை செய்வதற்கு உறுதி ஏற்க வேண்டும். கோவில்களை அரசு அருங்காட்சியகம் போல நடத்த முடியாது. அவை, உயிரோட்டமாக இருக்க வேண்டும்.

பேரூர்:'கோவில் அடிமை நிறுத்து' இயக்கத்துக்கு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவிக்கின்றனர். அது, டுவிட்டரில், 'டிரெண்டிங்' ஆகி, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.இதுகுறித்து, சத்குரு கூறியுள்ளதாவது:தமிழ் மக்கள் அனைவரும் கோவில்களை விடுதலை செய்வதற்கு உறுதி ஏற்க வேண்டும். கோவில்களை அரசு அருங்காட்சியகம் போல நடத்த முடியாது. அவை, உயிரோட்டமாக இருக்க வேண்டும். திராவிட பெருமையான கோவில்கள், முழுமையான வைபவமான நிலைக்கு வர வேண்டும்.அரசின் கரங்களில் இருந்து பக்தர்களின் கரங்களுக்கு வர வேண்டும். இது குறித்து, மூன்று கோடி மக்கள் பேசி இருக்கிறார்கள். இனியாவது அரசியல் கட்சிகள், இதை கவனிக்க வேண்டும். மூன்று கோடி மக்கள் தங்களுக்கு சொந்தமானதை ஆணித்தரமாக கேட்டுள்ளனர்.நாம் தமிழ் கோவில்களை காத்து புனரமைப்போம். என் உரிமையை எனக்கு மீட்டுக் கொடுத்து, கோவில்களை விடுவிப்பவருக்கே என் ஓட்டு.இவ்வாறு, சத்குரு கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X