ஊட்டி:''நீலகிரி தேயிலை துாள், கர்நாடகா மாநில கூட்டுறவு நியாய விலை கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கர்நாடகா அமைச்சர் சோமசேகர ரெட்டி தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில், கர்நாடகா கூட்டுறவு துறை அமைச்சர் சோம சேகர ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:நீலகிரியில், தேயிலை தொழிலை மேம்படுத்த, இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாளை கர்நாடகா மாநில கூட்டுறவு நியாய விலை கடைகளில் விற்பது குறித்து, விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா குண்டல்பெட் நகரத்தை, ரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. இதை செயல்படுத்துவது குறித்து, அந்த துறை அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பதால், எண்ணற்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், தமிழக மக்கள் பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணியை ஆதரிக்கின்றனர். இந்த கூட்டணி வெற்றிபெறும்.இவ்வாறு, சோமசேகர ரெட்டி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE