எப்போதும் ஹிந்துக்களை அவமதிப்பதும் ஹிந்து கடவுள்களை அசிங்கப்படுத்தி பேசுவதுமாக இருக்கும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என, எழுத்தாளர் பிரபாகரன் தெரிவித்தார்.அவரது பேட்டி:சமூக நீதியை பாதுகாப்பது நாங்கள் தான் என்கிறதே தி.மு.க.,முதன்முதலில் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு கொண்டு வந்தது மத்திய அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதன் பின் எம்.ஜி.ஆர். காலத்தில் 50 சதவீத ஒதுக்கீடும், ஜெயலலிதா காலத்தில் 69 சதவீத ஒதுக்கீடும் கொண்டு வரப்பட்டது. 9வது அட்டவணையில் சேர்த்தற்காக சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. தி.மு.க., காலத்தில் எதுவும் செய்யவில்லை.இது ஈ.வெ.ரா. பெரியார் மண், இங்கு பா.ஜ., நுழைய முடியாது என தி.மு.க., சொல்கிறதே1967 ல் தி.மு.க., ஜெயித்தது. அதன்பின் அக்கட்சி பிளவுபடாமல் இருந்திருந்தால் மக்கள் மாற்றத்தை விரும்பி காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட்டுக்கு ஓட்டு போட்டிருப்பர். பா.ஜ., அன்றைக்கு இல்லை. தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்து வந்தவுடன் மாற்றம் வந்தது. இதுவா… அதுவா… என்பது போல மக்கள் தி.மு.க., அ.தி.மு.க., என மாறி மாறி ஓட்டு போடுகின்றனர். இது ஒரு விதத்தில் பெண் எடுத்து பெண் கொடுப்பது மாதிரி தான்.தி.மு.க., வினர் சொல்வது போல பெரியார் மண்ணாக இருந்தால் கோயில்களில் செருப்பு கழற்றி போடக்கூட இடமில்லாத அளவுக்கு ஏன் கூட்டம் கூடுகிறது. ராமனை செருப்பால் அடித்தால் ஓட்டு அதிகமாக இருக்கும் என்று 6 மாதம் முன் சவால்விட்ட ஸ்டாலின் இப்போது ஏன் ரூ.1000 கோடி கோயில் புனரமைப்புக்கு ஒதுக்குவதாக வாக்குறுதி தருகிறார். வேல் பிடிக்கிறார். எங்கள் கட்சியிலும் ஹிந்துக்கள் உள்ளனர் என அறிக்கை விடுகிறார். இதையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இது குறித்த பா.ஜ.,வின் பிரசாரம் எடுபடுமாபா.ஜ., பிரசாரம் செய்வது மட்டுமல்ல. நடுநிலையாளர்களுக்கும் இந்த உணர்வு இருக்கத் தானே செய்கிறது. அலைபோல இல்லை. ஆனாலும் உள்ளே பாயும் கரண்ட் போன்ற உணர்வு ஏற்பட்டு ஹிந்து மக்கள் ஒரு புள்ளியில் இணைய தயாராக உள்ளனர். பிரதமர் மோடியின் தளம் பெரிய உந்துசக்தி. இதற்கு முன்பு பெரிய தலைமை கிடைக்கவில்லை. இப்போது மோடி ஆரோக்கியமான அரசியல் பேசுகிறார். ஆறாண்டு காலத்தில் பாகுபாடில்லாமல் மோடி செய்த திட்டங்களை மக்கள் பேசுகின்றனர். ஹிந்து கடவுள்களையும் பக்தர்களையும் அவமதித்த தி.மு.க.,விற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.கோயில் பணிகளுக்கு ரூ.1000 கோடி என்ற தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தாக்கதை ஏற்படுத்தும் தானே.ஒரு மாற்றமும் வராது. திருமண வீட்டில் ஹிந்து திருமண மந்திரங்களைப் பற்றி பேசினால் உடல் நடுங்குகிறது என பேசியதை மக்கள் மறக்கவில்லை. யாரும் நம்ப மாட்டார்கள். அவரது அறிக்கையை தண்ணீரில் எழுதி வைக்க வேண்டும். 50 ஆண்டுகளாக ராமனை கரித்து கொட்டியவர் கருணாநிதி. நான் அவரது பிள்ளை என்று அடிக்கடி சொல்லும் ஸ்டாலின் எப்படி ரூ.1000 கோடி கொடுப்பார்.அ.தி.மு.க., மோசமாக ஆட்சி செய்கிறது, தி.மு.க., தான் மாற்று என்கிறாரே ஸ்டாலின்.தி.மு.க., எந்த மாதிரியான பொற்காலத்தை தரப்போகிறது. 2ஜி ஊழல் போன்றா, சாதிக் பாட்ஷா கொலை போன்றா… அண்ணாநகர் ரமேஷ் கொலை போன்றா… இவர்களது சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். அரசியலில் மலினத்தை கொண்டு வந்தது தி.மு.க., தான். ஜெயலலிதாவை. சட்டசபையில் அவமானப்படுத்தியதை மறக்க முடியுமா.மத்திய அரசின் மேல் மக்களுக்கு இருக்கும் கோபத்தை தி.மு.க., சாதகமாக பயன்படுத்துகிறதா2019 பார்லிமென்ட் தேர்தலில் பலன் அடைந்தனர். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பயன் இருக்குமென்று இந்த முறை மக்கள் புரிந்து கொண்டனர். கல்வியை வியாபாரமாக்கும் முதலைகளிடமிருந்து இளைஞர்கள் தப்பித்து விட்டதை புரிந்து கொண்டனர். இனிமேல் தி.மு.க.,வின் நீட் எதிர்ப்பு பிரசாரம் எடுபடாது.ஆளும் அ.தி.மு.க.,வின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்க காரணம் உள்ளதாஜாதி ரீதியாக 10.5 உள் ஒதுக்கீடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க., கட்சி பிளவுபடாமல் இருந்திருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்க முடியும்.கருத்துக்கணிப்புகள் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வருகிறதே.அது அவர்களது கருத்துகளை திணிக்கும் ஒரு கருவி. அவ்வளவு தான்.பா.ஜ.க.,வுடன் கூட்டணி, அ.தி.மு.க.,வுக்கு பலமா பலவீனமா பலம் தான். பக்தர்களின் ஓட்டு பெரியளவில் கிடைக்கும். எல்லாவகையிலும் சாதகமாகத்தான் இருக்கும். 20 ஆண்டுகள் பின்னோக்கி போகவேண்டுமா… உலகத்தரத்தை உயர்த்த முயற்சிக்கும் மோடியின் கைகோர்த்து அனுமார் போல ஒரே தாவாக உயர வேண்டுமா… மக்களிடம் இந்த சித்தாந்தம் தான் தேர்தலில் எதிரொலிக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE