பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு எதுக்கு?

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:பிழைப்புக்காக வெளியூர்களில் இருந்தாலும், தேர்தல் நாளன்று, சிரமத்தை பொருட்படுத்தாமல், சொந்த ஊருக்கு சென்று, ஓட்டுப்பதிவு செய்யும் எளியோர் தான், நம் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்றனர். .ஆனால்
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பிழைப்புக்காக வெளியூர்களில் இருந்தாலும், தேர்தல் நாளன்று, சிரமத்தை பொருட்படுத்தாமல், சொந்த ஊருக்கு சென்று, ஓட்டுப்பதிவு செய்யும் எளியோர் தான், நம் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்றனர். .ஆனால் உள்ளூரில் இருந்தாலும், ஏதாவது காரணத்தை தனக்கு தானே சொல்லியபடியே, வசதியானோர் சிலர், ஓட்டு சாவடிக்கு செல்ல மறுக்கின்றனர். இவர்களை என்னவென்று சொல்வது?

நம்மை யார் ஆள வேண்டும் எனத் தீர்மானிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று, ஓட்டளிக்க, இந்திய குடிமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.நமக்கு கிடைத்திருக்கும் ஓட்டு உரிமையை, ஒருபோதும் ஜாதி, மதம் பாராமல், பணத்திற்கு விலை போகாமல் பயன்படுத்த வேண்டும்.ஒரு சீப்பு வாங்க வேண்டும் என்றாலே, அதன் தரத்தை பலமுறை சோதித்து வாங்குகிறோம்; ஆனால், நம்மை யார் ஆள வேண்டும் என்பதை மட்டும், சிந்தித்து ஓட்டளிக்க மறுக்கிறோம்.

பிறரின் சொல்படியும், 'பாரம்பரியமாக இந்த கட்சிக்குத் தான் ஓட்டுப் போட்டு வருகிறோம்' எனச் சொல்லியும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்.ஊழல்வாதி எனத் தெரிந்தும், அதிகாரம் கிடைத்தால் அராஜகத்தில் ஈடுபடுவர் என்பதுதெரிந்தும், அக்கட்சிக்கு ஓட்டு அளிப்பது, முட்டாள்தனம் அல்லவா!மறைந்த எழுத்தாளர் சுஜாதா கூறிய கருத்துகளை, மக்கள் பின்பற்ற வேண்டும்.கட்சி, சின்னம், ஜாதி, சாமி பார்த்து ஓட்டுப் போடக் கூடாது; வேட்பாளரைப் பார்த்து ஓட்டு போட வேண்டும்.முக்கியமாக, நாம் யாருக்கு ஓட்டு அளிக்கிறோமோ, அவர் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமூக சேவகர் ஒருவர் சுயேச்சையாக நின்றாலும், நிச்சயம் அவர் தோற்று விடுவார் என்று தெரிந்தாலும், அவருக்கு ஓட்டு அளியுங்கள்.உங்கள் ஓட்டு, நிச்சயம் அவரின் அவமானகரமான தோல்வியைத் தவிர்க்கலாம்; ஆனால், அதுவே அவருக்கு அடுத்த தேர்தலில் நம்பிக்கையைக் கொடுக்கலாம்.


latest tamil newsயார் ஒருவர், உங்களின் பார்வையில் நேர்மையானவராக தோன்றுகிறாரோ, அவருக்கு ஜாதி, மதம், கட்சி பார்க்காமல் ஓட்டளியுங்கள். அப்படி நீங்கள் பதிவு செய்யும் ஓட்டு, யார் ஆட்சிக்கு வர வேண்டாம் என நினைப்பவரை, தோல்வி அடைய செய்யும்.சுஜாதாவின் இந்த அறிவுரையை, வாக்காளர் அனைவரும் பின்பற்ற வேண்டும். நாளை, 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்து, நல்ல ஆட்சி அமைய வழி வகுப்போம்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
05-ஏப்-202120:07:38 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு யாருக்கு வோட்டு போடுவது :: தந்தை பெரியார் வழிகாட்டுகிறார் :: BRAMIN விஷயம் தெரிந்தவன் , தனக்கு எது நள்ளது யார் வந்தால் நல்லது என் சிந்தித்து ஒட்டு போடுவான் , நன் மக்களுக்கு இன்னும் அந்த விழிப்புணர்வு வரவில்லை , அதனால் ஓர் எளிய வழி. அவனுக்கு நல்லது என்றால் அது நமக்கு கேடு , அவன் யாரை ஆதரித்து வோட்டு போடுகிறானோ , அவர்கள் ஏடுகள் யாரை ஆதரித்து எழுது கின்றனவோ அவர்களை எதிர்த்து நீங்கள் வோட்டு போடுங்கள் , அம்புட்டுதான்
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
06-ஏப்-202100:02:50 IST Report Abuse
கதிரழகன், SSLCபிரசாந்து கிசோறு ன்னு ஒரு பிராமணன் யாருக்கு ஒட்டு போட சொல்லுறானோ அவனுக்கு எதிரா ஒட்டு போட்டு, பிராமண சாதியை முறியடியுங்கடா...
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
05-ஏப்-202119:22:15 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் மின்சாரவாரிய லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிவாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -மதுரை திருமங்கலம் மின்சாரவாரியத்தின் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை , லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது , பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் திருமங்கலம் மின்சாரவாரியத்தின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் மின்சாரவாரியத்தின் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை திருமங்கலம் தமிழ் நாடு மின்சாரவாரியத்திற்கு
Rate this:
Cancel
சுந்தர் சி, சென்னை சீமான், கமல்ஹாசன், தினகரன், நல்ல சுயேச்சை வேட்பாளர்க்கு வாக்கு செலுத்தலாமே. ஊழல் கட்சியான அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் க்கு வேணாமே உங்கள் ஓட்டு. மத, ஜாதி அரசியல் செய்யும் பாஜக, பாமக, விசிக க்கு ஓட்டு அளிப்பது மிக பெரிய பாவ செயல். சிந்தித்து வாக்கு அளியுங்கள்.
Rate this:
234 லட்சியம் 200 வெற்றி நிட்சயம் - DMK வெற்றிக்கு பாடுபடுவோம் ,வாலிஸ் புட்டுனா
05-ஏப்-202119:34:04 IST Report Abuse
234 லட்சியம்  200 வெற்றி நிட்சயம் நீங்கள் சொல்லவுது 100 % உண்மை எல்லோரும் அப்படி செய்தால் நலமே அனால் மீண்டும் ADMK BJP வந்துவிட்டால் ,""...மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும். 🛑...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
05-ஏப்-202123:39:14 IST Report Abuse
Mirthika Sathiamoorthiபாவம் அவரு கனவில் மிதக்குறாரு..எதார்த்தம் புரியாம...எனக்கு எங்களூரு சுயேச்சை நல்லவரா தெரிஞ்சு நாங்கள் தேர்ந்தெடுத்துட்டோம் இதுமாதிரி பல ஊரு அப்புறம் மெஜாரிட்டி இல்லாமல் யாரு ஆட்சி அமைப்பது ? 234 தொகுதியில் 130 சீட்டாவது ஜெயிக்கும் உடனே கூட்டணி நடக்கும் எதித்து அடிச்சுகிட்டு கட்சிகள் ஒண்ணுசேரும் ( எப்புடி சிவசேனாவும் காங்கிரஸும் சேர்ந்த மாதிரி) குதிரை பேரம் நடக்கும்....எந்த கட்சி ஊலல்ன்னு சொல்லி சுயட்சைக்கு ஓட்டைபோட்டேனோ அவரு அந்த ஊழல்கட்சியில் சேர்ந்து மந்திரியாய் வந்து நிப்பாரு...ஒரு வேலை அவரு எதிர்க்கட்சியை போயிட்டாருன்னா ஆளும் தரப்பு அவருக்கு அவர் தொகுதியில் நலத்திட்டங்கள் செய்ய விடாது ..நல்ல செஞ்ச அடுத்தமுறை மறுபடியும் அவரு ஜெயிச்சுடுவாரே ..நலத்திட்டங்களை நடத்த சொந்த காசுபோடனும்( தினகரனை RK நகரில் தேர்ந்தெடுத்த ரகசியம்)...அஞ்சுப்பைசா இல்லாமல் சட்டசபையில் கூவிட்டுத்தான் வரமுடியும்.. இதெல்லாம் மக்கள் யோசிச்சுதான் ஜெயிக்கும் கட்சின்னு இதுதான்னு வாக்கை போடுவதன் மூலம் ஆளும் கட்சியின் MLA நம் தொகுதியில்.... காசு அடிச்சாலும் மக்கள் நலன்னு ஏதாவது பண்ணுவாரு அவருக்கு இதை செய்வதில் விருப்பமில்லைனாலும் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டாவது நல திட்டங்களை செயல்படுத்துவாரு....நல்லவனை தேர்ந்தெடுக்குறேன்னு எவனையாவது உள்ளே விட்ட உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணான்னு வெறுத்து ஒதுக்கப்பட்ட தொகுதியா மாற ஐடியா கொடுக்கராருடாய்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X