அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு நோட்டு... குய்யோ, முய்யோ!

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
அவிநாசி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சபாநாயகர் தனபாலுக்கும், தி.மு.க., கூட்டணியின் ஆதித்தமிழர் பேரவையின் அதியமானுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தொகுதியில் அரசியல் கட்சிகளின் ஆறு வேட்பாளர்கள் உட்பட, 12 பேர் களத்தில் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஒரு தரப்பினர், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில், 65 சதவீதம் பேருக்கு, தலா, 500 ரூபாயும், மற்றொரு தரப்பினர், 55

அவிநாசி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சபாநாயகர் தனபாலுக்கும், தி.மு.க., கூட்டணியின் ஆதித்தமிழர் பேரவையின் அதியமானுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தொகுதியில் அரசியல் கட்சிகளின் ஆறு வேட்பாளர்கள் உட்பட, 12 பேர் களத்தில் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஒரு தரப்பினர், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில், 65 சதவீதம் பேருக்கு, தலா, 500 ரூபாயும், மற்றொரு தரப்பினர், 55 சதவீதம் பேருக்கு, 200 ரூபாயும் வழங்கி வருகின்றனர்.கோவை மாவட்டம், அன்னுார் வட்டாரத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காட்டம்பட்டி உள்ளிட்ட சில ஊராட்சிகளில், காலனிகளுக்கு சென்ற அரசியல் கட்சிகள், அங்கு உள்ளவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பணம் வினியோகம் செய்தபோது, பணம் கிடைக்காத, மற்றவர்கள் கட்சி நிர்வாகிகளை சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்தனர்.'எங்கள் பெயர் எப்படி விடுபட்டது. நிர்வாகிகள் எடுத்து வைத்துக் கொண்டீர்களா' என, சரமாரியாக புகார் தெரிவித்தனர். 'மீண்டும் வருகிறோம், விடுபட்டவர்களுக்கும் விரைவில் தருவோம்' என்று சமாதானம் சொல்லி கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து தப்பினர்.கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'குறைந்தது, 80 சதவீதம் பேருக்கு, கட்சித்தலைமை பணம் வழங்கினால் தான், பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க முடியும். 60 சதவீதம் பேருக்கு மட்டும் வழங்கும்போது, மற்றவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை' என புலம்பியபடி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X