பிரதமரின் வங்கதேச பயணம்!

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கொரோனா பரவல் காரணமாக, ஒரு ஆண்டுக்கு மேலாக வெளிநாடு போகாமல் இருந்த பிரதமர் மோடி, சமீபத்தில், அண்டை நாடான வங்கதேசத்துக்கு சென்றார். இந்த வெளிநாட்டு பயணத்திலும், மேற்கு வங்க தேர்தல் தான் முக்கியத்துவம் பெற்றது.மேற்கு வங்கத்தில், மட்டுவா என்ற சமூகத்தினர் உள்ளனர்; இவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், ஹரிசந்த் தாகூர் என்பவர், இந்த

கொரோனா பரவல் காரணமாக, ஒரு ஆண்டுக்கு மேலாக வெளிநாடு போகாமல் இருந்த பிரதமர் மோடி, சமீபத்தில், அண்டை நாடான வங்கதேசத்துக்கு சென்றார். இந்த வெளிநாட்டு பயணத்திலும், மேற்கு வங்க தேர்தல் தான் முக்கியத்துவம் பெற்றது.latest tamil newsமேற்கு வங்கத்தில், மட்டுவா என்ற சமூகத்தினர் உள்ளனர்; இவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், ஹரிசந்த் தாகூர் என்பவர், இந்த சமூகத்தினரின் தலைவராக இருந்தார். அப்போது, இந்த சமூகத்தினரில் பெரும்பாலானோர், வங்கதேசத்தில் தான் வசித்து வந்தனர். இந்த மட்டுவா இனத்தை முன்னேற்றுவதுதான் தாகூரின் நோக்கம். வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பின், இந்த சமூகத்தினர், மேற்கு வங்கத்துக்கு வந்துவிட்டனர்.

ஆனாலும், இன்னும் சிலர் வங்கதேசத்திலேயே உள்ளனர்.இந்த தாகூர் பிறந்த இடம், வங்கதேசத்தில் உள்ளது. தன் பயணத்தின்போது, இந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் மோடி. மேற்கு வங்க தேர்தலை மனதில் வைத்து தான் இங்கு சென்றுள்ளார் மோடி. மட்டுவா சமூகத்தைச் சேர்ந்த மூன்று கோடி பேர், மேற்கு வங்கத்தில் உள்ளனர். 70 தொகுதிகளில் இவர்களது ஓட்டுகள், வெற்றியைத் தீர்மானிக்கும்.குடியுரிமை சட்டம் இயற்றியது, இந்த அமைப்பினரிதையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


இவர்கள் வங்க தேசத்தில் இருந்து வந்தவர்கள். இந்த சட்டத்தின் மூலம் இவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும். மம்தா பானர்ஜி கட்சிக்கு ஓட்டளித்து வந்த இவர்கள், கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., பக்கம் சாய்ந்துவிட்டனர். இப்போது பிரதமர், மட்டுவா சமூகத் தலைவரின் நினைவிடத்துக்குச் சென்றது, அந்த சமூகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
05-ஏப்-202115:22:28 IST Report Abuse
sahayadhas ஆஹா, ஒட்டுக்கு தான் ஒட்டமா? ஜனங்க GST பணம் அனியாயமாக ெசவு.
Rate this:
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
05-ஏப்-202113:02:39 IST Report Abuse
Shaikh Miyakkhan அப்படி என்றால் மம்தாஜி தேர்தல் கமிசனிடம் கோரிக்கை வைத்தது சரியானதே ?
Rate this:
Cancel
234 லட்சியம் 205 வெற்றி நிட்சயம் - DMK வெற்றிக்கு பாடுபடுவோம் ,வாலிஸ் புட்டுனா
05-ஏப்-202112:55:27 IST Report Abuse
234 லட்சியம்  205 வெற்றி நிட்சயம் இல்லை வங்கதேச மக்கள் தொகை குறைக்க செல்லுகிறார் , போன தடவ சென்ற பொது GO BACK modi நடந்து துப்பாக்கி சூடு 14 பேர் பலி , மீண்டும் செல்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X