பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ஏப்., 5, 1901திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற கிராமத்தில், 1901 ஏப்., 5ல் பிறந்தவர், எஸ்.எஸ்.பிள்ளை. இளம்வயதில் பெற்றோர் இறந்ததால், ஆசிரியர் சாஸ்திரியார் அளித்த உதவியால், கல்வி கற்றார். அண்ணாமலை பல்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது, எண் கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நாட்டிலேயே முதன்முதலாக கணிதத்தில், 'டாக்டர்' பட்டம் பெற்ற பெருமையை ஈட்டினார். திருவனந்தபுரம்,
 இதே நாளில் அன்று

ஏப்., 5, 1901

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற கிராமத்தில், 1901 ஏப்., 5ல் பிறந்தவர், எஸ்.எஸ்.பிள்ளை. இளம்வயதில் பெற்றோர் இறந்ததால், ஆசிரியர் சாஸ்திரியார் அளித்த உதவியால், கல்வி கற்றார்.

அண்ணாமலை பல்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது, எண் கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நாட்டிலேயே முதன்முதலாக கணிதத்தில், 'டாக்டர்' பட்டம் பெற்ற பெருமையை ஈட்டினார். திருவனந்தபுரம், கோல்கட்டா, சென்னை பல்கலைகளிலும் பணியாற்றினார்.உலகெங்கும் உள்ள கணித மேதைகள், பல ஆண்டுகாலமாக முயன்றும், முழுமையாக வெற்றிகாண முடியாத, 'வாரிங்ஸ்' மற்றும் 'ப்யுரியர் சீரிஸ்' புதிருக்கு, விடை கண்டறிந்தார். மொத்தம், 76 கணித ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் இருந்து அழைப்பு வந்தும், என் தாய்நாடே முக்கியம் என, மறுத்தார். அமெரிக்காவில், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறவிருந்த, உலகக் கணித மாநாட்டுக்குத் தலைமை ஏற்கச் சென்றார். 1950 ஆக., 31ல், விமானம் விபத்துக்குள்ளானதில், தன், 49வது வயதில் உயிரிழந்தார்.கணித மேதை எஸ்.எஸ்.பிள்ளை, பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X