பொது செய்தி

இந்தியா

சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.நாட்டில் முதற்கட்டமாக, டாக்டர், நர்ஸ் உட்பட சுகாதாரத் துறையினர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.பின், 60 வயதிற்கு மேற்பட்டோர், 45 வயதிற்கு மேற்பட்ட, நோய் பாதிப்பு

புதுடில்லி: சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.



latest tamil news


நாட்டில் முதற்கட்டமாக, டாக்டர், நர்ஸ் உட்பட சுகாதாரத் துறையினர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.பின், 60 வயதிற்கு மேற்பட்டோர், 45 வயதிற்கு மேற்பட்ட, நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது, 45 வயதுக்கு மேலான அனைவருக்கும், தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதற்கிடையே, தடுப்பூசி மையங்களில் அரசின் வழிகாட்டுதல்களை மீறி, முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் பெயரில், தகுதியில்லாத நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதாக, மத்திய சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனால், சுகாதாரத் துறையினர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிறுத்தி வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதம்:சமீப காலமாக, தடுப்பூசி மையங்களில், அரசின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டு, சுகாதாரத்துறையினர் என, பலருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


latest tamil news



கடந்த சில நாட்களில், தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரத்துறையினர் எண்ணிக்கை, 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், சுகாதாரத்துறையினர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, தடுப்பூசி போடும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.இவர்களில், ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202106:17:17 IST Report Abuse
ஆப்பு அதுசரி.. தடுப்பூசி போடறவங்க எல்லாம் களப்பணியாளர்கள் தானே..ரொம்ப நல்லவங்கோ.. எல்லொருக்கும் தடுப்பூசி போட்டு காப்பாத்துறாங்க.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
05-ஏப்-202114:27:58 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\தடுப்பூசி மையங்களில் அரசின் வழிகாட்டுதல்களை மீறி, முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் பெயரில், தகுதியில்லாத நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதாக, .....\\ . கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிரேமலதா அண்ணியார் தான் ஏற்கனவே (மார்ச் 15 க்குள்ளாகவே) இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு கொண்டுவிட்டதாகவும், அதனால் கொரோனா பரிசோதனைக்கு வரமுடியாது என்று மறுத்ததாகவும் செய்தி வந்தபோது, இதே கேள்வி எழுப்பப்பட்டது .........கிட்டத்தட்ட அது உண்மை மாதிரிதானே இருக்கு ............
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
05-ஏப்-202110:09:23 IST Report Abuse
Hari சரியான முடிவு ,வரிசை முக்கியம் ,சுகாரப்பணி இறைப்பணி அதுக்கு முக்கியத்துவம் கொடுத்தபோது மதிக்காத எவனுக்கும் இப்போது முக்கியத்துவம் கொடுப்பது பொது மக்களை உதாசீனப்படுத்தி வழிப்பறி செய்யும் செயலுக்கு ஒப்பாகும்.இதை அனுமதிக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X