அரசியல் செய்தி

தமிழ்நாடு

குத்தாட்டம் போட்ட கமல் மகள்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கோவை:கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும், ம.நீ.ம., தலைவர் கமலை ஆதரித்து, நேற்று நடிகை சுஹாசினியும், கமலின் இரண்டாவது மகள் அக் ஷரா ஹாசனும் பிரசாரம் செய்தனர். காலையில், ராம்நகர் கோதண்டராமர்கோவிலில் இருவரும் தரிசனம் செய்தனர்.அதன்பின், அருகே அருகே உள்ள அபார்ட்மென்ட் மற்றும் வீடுகளுக்கு நடந்து சென்று, 'டார்ச்லைட்' சின்னத்தை காண்பித்து ஓட்டு சேகரித்தனர். பகல், 11:00 மணிக்கு
 குத்தாட்டம் போட்ட கமல் மகள்

கோவை:கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும், ம.நீ.ம., தலைவர் கமலை ஆதரித்து, நேற்று நடிகை சுஹாசினியும், கமலின் இரண்டாவது மகள் அக் ஷரா ஹாசனும் பிரசாரம் செய்தனர். காலையில், ராம்நகர் கோதண்டராமர்கோவிலில் இருவரும் தரிசனம் செய்தனர்.அதன்பின், அருகே அருகே உள்ள அபார்ட்மென்ட் மற்றும் வீடுகளுக்கு நடந்து சென்று, 'டார்ச்லைட்' சின்னத்தை காண்பித்து ஓட்டு சேகரித்தனர். பகல், 11:00 மணிக்கு இருவரும் அம்மன்குளம், புலியகுளம், கல்லுக்குழி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, பெண்களை சந்தித்து ஓட்டு சேகரித்தனர்.அம்மன்குளம் பகுதியில், தாரை தப்பட்டை முழங்க, ஜமாப் குழுவில் உள்ள ஆண்களும், பெண்களும் குத்தாட்டம் போட்டனர். கமலின் மகள் அக் ஷரா, நடிகை சுஹாசினி, அவர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், சாலையில் சென்றவர்கள் கூட்டத்தோடு, 'ரவுண்ட்' கட்டி ஆடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X