பொள்ளாச்சி:கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் நடந்த தி.மு.க.,தேர்தல் பிரசார கூட்டத்தில், துணை சபாநாயகர், அவரதுமகன் ஆகியோர் குறித்து அவதுாறாக பேசியதாக, தி.மு.க., எம்.பி., தயாநிதி மீது, அவதுாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் மார்ச் 29ல், தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர், எம்.பி., தயாநிதி பிரசாரம் செய்தார். அப்போது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் குறித்து அவதுாறாக பேசினார்.இதுதொடர்பாக, பொள்ளாச்சி ஜெயராமன் கிணத்துக்கடவு போலீஸ் மற்றும் கோவை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தார். விசாரித்த எஸ்.பி., அலுவலகம், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.கிணத்துக்கடவு போலீசார், தயாநிதி மீது, உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புதல், அவதுாறு பரப்புதல், தேர்தலுக்காக பொய் பிரசாரம் மேற்கொள்ளுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE