திருப்பூர்:திருப்பூர், ஏ.பி.டி., ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பிரபா தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மதுரையை சேர்ந்த பெரியசாமி, 33 என்பவர் இருந்தார்.இவர் கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது. இந்நிறுவனம் திருப்பூரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ், கனரா மற்றும் பேங்க் ஆப் பரோடா வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணத்தை நிரப்பி விட்டு, மீதமுள்ள பணத்துடன் மினி வேனில், கோவைக்கு திரும்புவது தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லை. இதனால், வாகனத்தில் இருந்த, ஒரு கோடியே, 44 லட்சத்து, 81 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE